8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது 


வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறை சார்பில் சென்னை யில், வரும் 6-ம் தேதி (வெள்ளிக் கிழமை) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறு கிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு: 


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை யும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ ஆக அனுசரிக்கப்பட்டு வேலை வாய்ப்பற்றi இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர் கள் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். 


 அந்த வகையில், சென்னை யில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து மார்ச் 6-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்து கின்றன. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் (தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில் 8-ம் வகுப்பு முதல் கலை அறிவியல் பட்டப்படிப்பு வரை (ஐடிஐ, பாலிடெக்னிக் உட்பட) அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் கலந்து கொள்ளலாம். மாற்றுத் திறனாளி களும் பங்கேற்கலாம். 


வயது 35-க்குள் இருக்க வேண்டும். இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங் கள் கலந்துகொண்டு 1,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய உள்ளன. இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Please Comment