உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் பாஸ்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் பாஸ்!

சீனா, இத்தாலி, ஸ்பெயின் உள்பட உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மார்ச் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. 



இருப்பினும் இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி உபி மாநிலத்தில் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 



இதனால் மாணவர்கள் குஷியில் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Please Comment