வீடுகளில் சாம்பிராணி புகை போடும் இல்லத்தரசிகள்
மஞ்சள், கிருமிநாசினி கலந்து வாசலில் தெளிக்கிறார்கள்
கொரோனா வைரஸ் வராமல் தடுக்க ‘சானிடைசர்’ போன்ற கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் வீடுகளில் தினந்தோறும் கிருமிநாசினி தரையில் தெளிக்கப்படுகிறது. பல வீடுகளில் நீரில் மாட்டுச்சாணம் மற்றும் மஞ்சள் கலந்து காலையிலேயே வீட்டு வாசலில் தெளித்து விடுகிறார்கள்.
பல வீடுகளில் பண்டைய முறை திரும்பி இருக்கிறது.
வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் கைப்பிடிகள், ஜன்னல் கம்பிகள், கதவுகள் போன்ற இடங்களில் அடிக்கடி இல்லத்தரசிகள் கிருமிநாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்கிறார்கள். இதுதவிர காலையும், மாலையும் என இருவேளைகளில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுகிறார்கள்.
இப்படி செய்வதின் மூலம் எந்த வித கிருமிகளும் வீடுகளில் அண்டவிடக்கூடாது என்று இல்லத்தரசிகள் மெனக்கெடுகிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் வெள்ளிக்கிழமை சூழ்நிலையையே வீடுகள் உணர்த்துவது போல உள்ளன.
அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு செல்லும் ஊழியர்களும் குளித்தபிறகே மனைவியுடன் பேசுகிறார்கள். குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகிறார்கள். இப்படி கொரோனா வைரஸ் தாக்கம் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்து வருகிறது.

No comments:
Post a Comment
Please Comment