பொதுமக்கள், நிறுவனங்கள் நன்கொடை அளிக்கலாம் - மாண்புமிகு முதலமைச்சர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொதுமக்கள், நிறுவனங்கள் நன்கொடை அளிக்கலாம் - மாண்புமிகு முதலமைச்சர்

கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், நிறுவனங்கள் நன்கொடை அளிக்கலாம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் 


கரோனா வைரஸ் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள் நிதியுதவி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தி: 

நோய்த் தொற்று இனங்களை திறம் படக் கையாள, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்து தல், மருத்துவமனைக்கான படுக்கை கள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமி நாசினி சாதனங்கள் ஆகியவற்றை வழங்க நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. 


பல்வேறு தொழிலாளர்கள் வருமான இழப்பை சந்திக்கின்றனர். ஏழை, ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்க வும் உதவி தேவைப்படுகிறது. எனவே, மக்கள் நலனில் அக்கறை உள்ள குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர் கள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய நன்கொடைகளுக்கு வருமானவரிச் சட்டப் பிரிவு 80(ஜி)யின் கீழ் முழு வரிவிலக்கு உண்டு. 

வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளி நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நிவாரணத்துக்கு அயல்நாட்டு பங்க ளிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தின்கீழ் விலக்கு அளிக்கப்படும். நன்கொடைகளை மின்னணு மூலம் முன்னுரிமைப்படி, வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமாக, 'https://ereceipt.tn.gov.in/cmprf.html' என்ற இணையதளம் வாயிலாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். 

எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்) வாயிலாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், தலைமைச் செயலகம் கிளையில் உள்ள 117201000000070 என்ற சேமிப்புக் கணக்கு எண்ணுக்கு அனுப்பலாம். இதற்கு ‘IOBA0001172’ எனற ஐஎப்எஸ்சி கோடு மற்றும் AAAGC0038F என்ற முதல்வர் பொது நிவாரண நிதிக்கான பான் எண்ணை பயன்படுத்த வேண்டும். 


 இசிஎஸ் மூலம் நிதி அனுப்புவோர், உரிய அலுவலகப் பற்றுச்சீட்டை பெற, பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்கள் முழு முகவரி, மின்னஞ்சல் விவரத்தை குறிப்பிட வேண்டும். வெளிநாடுவாழ் மக்களிடம் இருந்தும் நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது. அவர்கள் ‘IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai’ என்ற SWIFT Code-ஐ பின்பற்ற வேண்டும். மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள், குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலம், 

அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், 
முதலமைச்சர் பொது நிவாரண நிதி, 
நிதித்துறை, தமிழ்நாடு அரசு, 
தலைமைச் செயலகம், 
சென்னை-600009, 
தமிழ்நாடு, 
இந்தியா, 
மின்னஞ்சல் முகவரி ‘dspaycell.findpt@tn.gov.in’ 

என்ற முகவரிக்கு அனுப்பலாம். தற்போதைய நிலையில் நேரடியாக முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. எனினும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வழங்குவோரின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment