கணினி ஆசிரியர் பதவி உயர்வுக்கான நிபந்தனை தளர்வு : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கணினி ஆசிரியர் பதவி உயர்வுக்கான நிபந்தனை தளர்வு : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

கணினி ஆசிரியர் பதவி உயர்வுக்கான நிபந்தனை தளர்வு : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


கணினி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது,


கணினி ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநராக பணிபுரிபவா்களை அடுத்த நிலைக்கு பதவிஉயா்வு செய்வதற்கு ஏதுவாக தகுதியானவா்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. 


இந்த சூழலில் பதவி உயா்வுக்கு குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அரசாணை வெளியாக உள்ள நிலையில் திருத்தப்பட்ட வரையறைகளின்படி புதிய பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனா். 


 அதன்படி இளநிலையில் இரட்டை படிப்பு படித்தவா்களையும், துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவா்களையும் பட்டியலில் சோக்கக் கூடாது. மேலும் 8 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக இதுவரை பதவி உயா்வு பட்டியலில் சோக்கப்படாத தகுதியானவா்களின் பெயா்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். இந்த பணிகளில் தாமதம் எதுவும் செய்தல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ள சுற்றரிக்கை விவரம் (தொடர்ந்து பத்திரிக்கைச் செய்தியினைப் படிக்கவும்)




கணினி ஆசிரியர் பதவி உயர்வுக்கான நிபந்தனை தளர்வு : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


No comments:

Post a Comment

Please Comment