வரலாற்றில் இன்று 11-03-2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 11-03-2020

*🔵நாடும் ⚖️ நடப்பும்*

*🇳🇪 வரலாற்றில் இன்று 🇳🇪*


               _*🌹புதன் 🌹*_

*✍️பதிவு நாள்:  11-03-2020*

*கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்* 

🖌️222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.

🖌️1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

🖌️1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது.

🖌️1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.

🖌️1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]

🖌️1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.

🖌️1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.

🖌️1888 – ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.

🖌️1897 – மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.

🖌️1902 – இலங்கையில் காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.[2]

🖌️1905 – இலங்கையில் காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.[2]

🖌️1917 – முதலாம் உலகப் போர்: பக்தாத் நகரம் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.

🖌️1918 – உருசியாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.

🖌️1931 – சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

🖌️1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் கடன்-குத்தகை ஒப்பந்தம் சட்டத்தை அமுல்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பு போர்த் தளவாடங்கள் நேச நாடுகளுக்கு கடனாக அனுப்பப்பட்டன.

🖌️1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளங்கள் மீது மிகப்பெரிதான கமிக்காஸ் தாக்குதலை ஆரம்பித்தது.

🖌️1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானின் பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.

🖌️1946 – நாட்சிகளின் அவுசுவிட்சு வதமிகாமின் முதலாம் கட்டலை அதிகாரி ருடோல்ஃப் ஒசு பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.

🖌️1958 – ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்கு கரோலைனாவில் பலர் காயமடைந்தனர்.

🖌️1977 – வாசிங்டனில் அனாஃபி முசுலிம்களால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 130 பேரும் மூன்று இசுலாமிய நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.

🖌️1978 – ஒன்பது பாலத்தீனத் தீவிரவாதிகள் இசுரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 37 பொதுமக்களைக் கொன்றனர்.

🖌️1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.

🖌️1990 – லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.

🖌️1998 – திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.

🖌️1999 – இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.

🖌️2004 – எசுப்பானியா தலைநகர் மாத்ரிதில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.

🖌️2007 – தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5ஏ என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.

🖌️2009 – செருமனியில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.

🖌️2010 – செபஸ்டியான் பினேரா சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் பிச்சிலெமு பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட நிலநடுக்கம் பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.

🖌️1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.

🖌️2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.

🖌️2012 – ஆப்கானித்தான், காந்தாரம் அருகே அமெரிக்க இராணுவ வீரன் 16 பொதுமக்களைப் படுகொலை செய்தான்.

*🔵பிறப்புகள்* 

🖌️378 – முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) (இ. 417)

🖌️1811 – உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1877)

🖌️1898 – சித்பவானந்தர், இராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி (இ. 1985)

🖌️1912 – என். ஜி. ராமசாமி, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1943)

🖌️1913 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர்,பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் (இ. 1987)

🖌️1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (இ. 1976)

🖌️1931 – ரூப்பர்ட் மர்டாக், ஆத்திரேலிய-அமெரிக்கத் தொழிலதிபர்

🖌️1936 – ஹெரால்டு சூர் ஹாசென், நோபல் பரிசு பெற்ற செருமானிய நச்சுயிரியலாளர்

🖌️1952 – டக்ளஸ் ஆடம்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 2001)

🖌️1985 – அஜந்த மென்டிஸ், இலங்கைத் துடுப்பாளர்

*🔵இறப்புகள்* 

🖌️1863 – ஜேம்சு ஓற்றம், ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1803)

🖌️1955 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய உயிரியலாளர் (பி. 1881)

🖌️1967 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. 1896)

🖌️1971 – பைலோ பார்ன்சுவர்த், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1906)

🖌️1979 – ஆர். அனந்த கிருஷ்ணர், ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (பி. 1893)

🖌️1997 – திக்குறிசி சுகுமாரன், மலையாள இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. 1916)

🖌️2002 – ருடால்ப் ஹெல், செருமானியக் கண்டுபிடிப்பாளர் (பி. 1901)

🖌️2012 – த. ஆனந்தமயில், ஈழத்து எழுத்தாளர் (பி. 1947)

🖌️2013 – சு. சபாரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1930)

🖌️2013 – ஸ்ரீபாத பினாகபாணி, இந்திய கருநாடக இசைப் பாடகர், மருத்துவர் (பி. 1913)

🖌️2013 – வே. தில்லைநாயகம், நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. 1925)

*🔵சிறப்பு தினம்* 

🖌️விடுதலை தினம் (லித்துவேனியா, சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment