சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சிம்பிள் டிப்ஸ்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சிம்பிள் டிப்ஸ்!

சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சிம்பிள் டிப்ஸ்!


பனிக்காலம் மற்றும் குளிர்காலம் வந்தால் போதும் சிலருக்கு தும்மல் ஓயாமல் வந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் தூசி மற்றும் அழுக்குகள் இருக்கும் இடங்களுக்கு சென்றால் இடைவிடாமல் தும்மிக் கொண்டே இருப்பார்கள். 

சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா, உங்களுக்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சைனஸ் பிரச்சனையால் நம் முகத்தில் பல விதமான பாதிப்புகள் ஏற்பட்டுவிடும். சளி, தும்மல் போன்றவை சைனஸ் பிரச்சனையால் வருகின்றன. 

சைனஸ் பகுதியில் இது ஏற்படுவதால் சைனசிட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது. நம் மூக்கின் துவாரத்தை பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதால் இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது. 

மூக்கு பகுதியில் மூக்கின் சதை வளர்ச்சி காரணமாகவும் இந்த நோய் வரலாம். பெரும்பாலும் மூக்கு எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், தூசுக்கள் மற்றும் குப்பைகள் பிரச்சனையாலும் இது நமக்கு அடிக்கடி வர வாய்ப்புள்ளது.

சைனஸ் பிரச்சனை வருவதற்கான அறிகுறிகள்: இதனால் நமக்கு கன்னம் மற்றும் நெற்றிப் பகுதிகளில் கடுமையான வலி ஏற்படும். தாங்கிக் கொள்ளாத தலைவலியாக இருக்க கூடும். சிலருக்கு மஞ்சள் நிறத்திலும், ரத்தமாகவும் சளி வரத் தொடங்கும். 

சளி கடுமையான நாற்றத்துடன் வரும். மூக்கை தொட்டாலே நமக்கு தீராத வலி ஏற்படும். இரவு நேரங்களில் அதிகமாக இருமல் வந்து கொண்டே இருக்கும். காலையில் எழுத்தவுடன் தும்மல் தொடர்ச்சியாக வரும். 

பல் வலி மற்றும் காதுவலி அதிகமாக ஏற்படும். வாசனை உணர்வும், சுவை உணர்வும் குறையத் தொடங்கிவிடும். தீடீரென காய்ச்சல் வரும். உடல் மிகுந்த சோர்வு மற்றும் அலுப்பாக இருக்கும், 

அதனால் சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியாது. சைனஸ் பிரச்னையை தவிர்க்க எளிய டிப்ஸ்! பனிக்காலம் மற்றும் குளிர் காலங்களில் அதிகாலை, இரவு வேலைகளில் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். 

தலையணை, படுக்கை அறை மற்றும் படுக்கை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தலையணைகளை அடிக்கடி சுத்தமாக துவைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கைக்குட்டையை வெண்ணீரில் துவைத்து கொள்ளுங்கள். 

கைகுட்டைகளை அடிக்கடி மாற்றுவது நோய் கிருமிகள் பரவாமல் இருப்பதை தடுக்க செய்யும். நீங்கள் சுகாதாரமாக இருத்தல் அவசியம் ஆகும். நூல் , பஞ்சு மற்றும் கயிற்றுத் துகள்கள் அதிகமாக பரவி இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள். 

புகை, ஒட்டடை, சிமென்ட் போன்று தும்மலை ஏற்படுத்தக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கண்டிப்பாக முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுங்கள் செடி,

பூக்கள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களுக்கு சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் செல்லக்கூடாது. பூத்தோட்டம் என்று உலவுவதை தவிருங்கள், இதனால் உங்களுக்கு அதிக தும்மல் மற்றும் தலைவலி ஏற்படலாம். 

உங்கள் வீட்டை குப்பை, ஒட்டடை அண்டாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கரப்பான் பூச்சி பெருகவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அழுக்காக தண்ணீர் இருக்கும் நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம். 

குளிர்பானம் போன்ற அதிக குளிர்ச்சியான பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும். அலர்ஜியை ஏற்படுத்தக் கூடிய உணவுப்பொருட்களை ஆராய்ந்து அதை உண்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்தையும் விட முக்கியமாக புகைப்பிடிப்பது மற்றும் மூக்குப்பொடி போடுவதையும் தவிர்க்க வேண்டும்.


Get rid of sinus problems? Simple Tips You Must Observe!


During the winter and winter, some people will not sneeze. Also, if you go to places where there is dust and dirt, you will sneeze constantly. Here are the steps for you to get rid of sinus problems. Sinus problems can affect us in many ways. Cold and sneezing is caused by sinus problems. It occurs in the sinus region and is called sinusitis. This problem is likely due to the bony arch that divides the cavity of our nose.

The disease can also be caused by the growth of the nose to the nose. This is often caused by improper growth of the nose bone and problems with dust and debris. Signs of Sinus Problem: We have severe pain in the cheek and forehead. There may be unbearable headaches. Some people will start to get mucous, yellow and blood. The mucus comes with a severe odor. When we touch our nose, we have pain. Excessive coughing at night. In the morning, sneezing with the letter will continue.

Tooth aches and ear problems are more frequent. The sense of smell and taste begins to subside. The fever will soon come. The body can be very tired and boring, so people with sinus problems cannot concentrate at work. Simple Tips to Avoid Sinus Problems! Decrease outdoors in the early hours of the night and during the winter. Keep pillows, bedding and bedding clean. Rinse the pillows frequently. Rinse your handkerchief with butter.

Frequent replacement of the limbs will prevent the spread of germs. It is essential that you stay healthy. Avoid going to places where yarn, linen and linen are more spread out. Avoid going to places where you can sneeze, smoke, smear, or cement. When traveling in a two-wheeler, definitely wear a mask to the face. Avoid browsing the garden so that you may have more sneezing and headaches.

Keep your home clean and clean. Be careful not to overpower the cockroaches in particular. Avoid bathing in dirty water. Avoid eating too much cold stuff like cold drinks. Analyze foods that cause allergies and avoid eating them. Above all, you should avoid smoking and nasal contamination.

No comments:

Post a Comment

Please Comment