பெண்களுக்கான சிறுசேமிப்பு சிறப்பு முகாம்  - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெண்களுக்கான சிறுசேமிப்பு சிறப்பு முகாம் 

அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் பெண்களுக்கான சிறுசேமிப்பு சிறப்பு முகாம் வரும் 6 மற்றும் 7-ம் தேதி நடைபெறுகிறது 

பெண்களுக்கான சிறு சேமிப்பு சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வரும் 6 மற்றும் 7-ம் தேதி நடைபெறும் என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்i, “உலக மகளிர் தினவிழா மார்ச் 8-ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, பொருளா தாரத்தில் பெண்கள் தனித்துவம் பெறவும், சமூகத்தில் மதிப்பு மிக்க நபர்களாக உருவாக்க, பெண்களுக்கான சிறு சேமிப்பு முகாம் வரும் 6 மற்றும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. 

அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், மங்கையருக்கு அடல் பென்ஷன் சேமிப்பு வங்கி திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம், பேரிளம் பெண்களுக்கு பென்ஷன் திட்டம் (ரூ.ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை-அடல் பென்ஷன் யோஜனா திட்டம்) உள்ளது.  

குறைந்தபட்ச தொகை இத்திட்டங்களில் இணைய குறைந்தபட்ச தொகையாக முறையே ரூ.250, ரூ.500, ரூ.19 மற்றும் ரூ.42 மட்டும் போது மானது. எனவே, விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள 3 புகைப்படங்களுடன் அஞ்சல் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment