நகங்களை சரியான முறையில் பராமரிப்பது எப்படி?
தரமான நெயில் பாலிஷையே எப்போதும் உபயோகிக்கவும். நெயில் பாலிஷை நேரடியாக நகத்தில் அப்ளை செய்வதற்கு முன், ‘பேஸ் கோட்’, அதாவது நிறமற்ற ட்ரான்ஸ்பரென்ட் பாலிஷை அப்ளை செய்யவும்.
நெயில் பாலிஷ் போட்டபிறகும் இந்த நெயில் பேஸை அப்ளை செய்யலாம்.
வாரத்திற்கு ஒரு முறை நெயில் பாலிஷை முற்றிலும் அகற்றிவிட்டு, சோப் கலந்த குளிர்ந்த நீரில் விரல்களை ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பிறகு, சாதாரண தண்ணீரில் நன்கு கழுவி, விரல்கள் நன்கு உலர்ந்தவுடன், ஒரு சொட்டு ஆலிவ் எண்ணெய் அல்லது க்யூடிகிள் க்ரீமை விரல்களில் அப்ளை செய்யவும். வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இப்படிச் செய்வதால், நகங்கள் நன்கு சுவாசிப்பதுடன் க்யூட்டிகிள்களும் மென்மையாக மாறும். நகங்கள் உடையாமல் வலுவாக இருப்பதற்கும் இந்த மசாஜ் உதவும்.
அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், மசாஜ் மட்டுமல்லாமல், பேக் போட்டு பராமரிப்பதும் நல்லது. இதற்கு, இரண்டு டீஸ்பூன் முல்தானி மட்டி, 1/4 டீஸ்பூன் கடல் பாசியுடன் ரோஸ் வாட்டர் கலந்து, நகங்களின் மேல் அப்ளை செய்யவும்.
அரை மணி நேரம் கழித்து கழுவவும். இப்படிச் செய்வதால் நகங்கள் மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள சருமப் பகுதியும் ஆரோக்கியமாக இருக்கும்.
How to maintain proper nails?
Always use a quality nail polish. Before applying a nail polish directly, apply a base code, ie a colorless transparent polisher.
This nail base can be applied after the nail polish is applied. Rinse the nail polish once a week and soak the fingers in soapy cold water for five minutes.
Then, rinse well with normal water, and when the fingers are dry, apply a drop of olive oil or cubicle cream on the fingers. Massage in a circular shape. By doing this, the nails will breathe well and the cuticles will become soft. This massage also helps to keep the nails strong.
People who use nail polish often, not only massage but also pack and maintain. For this, mix two tablespoons of Multani shellfish with 1/4 teaspoon of seaweed rose water and apply on top of the nails.
Wash for half an hour. By doing so, not only the nails but also the skin surrounding it will be healthy.

No comments:
Post a Comment
Please Comment