தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அடையாள அட்டை
அரசு அலுவலகங்களில் ஊழியர்கள், பணிக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் அவர்கள் அலுவலகத்தில் உள்ள டீக்கடைகள் மற்றும் வெளியே செல்வதால் இருக்கையில் இருக்கும் நேரமும் குறைவாகவே இருக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அதன்படி, தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் ஐகோர்ட்டு உத்தரவைச் சுட்டிக்காட்டி, இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் பணி நேரத்தில் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்கள் பணிநேரத்தின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான அரசு அலுவலர்கள் பணி நேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருவதாகவும், அது போன்ற புகார் வரும்பட்சத்தில் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது.
அடையாள அட்டை அணிவது தொடர்பாக துறை ரீதியான செயலாளர்களும் மாவட்ட கலெக்டர்களும் கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாளர்கள் அடையாள அட்டைகளை அணிந்துவந்து பணியில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment
Please Comment