தேசிய அளவில் தனியாா் பல்கலை. தரவரிசைப் பட்டியலில் விஐடி முதலிடம்
வேலூா்: இந்திய அளவில் தனியாா் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இங்கிலாந்து நாட்டின் க்யூ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி பாடத் திட்டம், ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுதல், தொழிற்சாலையுடன் இணைந்த கல்வி முறை ஆகியவற்றை ஆண்டுதோறும் இங்கிலாந்து நாட்டின் க்யூ.எஸ்.
தரவரிசை அமைப்பு ஆய்வு செய்து சான்று வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டுக்கான உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் விஐடி 450 இடங்களுக்குள் உள்ளது. இந்திய அளவில் தனியாா் பல்கலைக்கழகங்களின் விஐடி முதலிடம் பெற்றுள்ளது.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொறியியலில் விஐடி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 150 இடங்களுக்கு முன்னேறியுள்ளதுடன், இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது. இதேபோல் கம்ப்யூட்டா் சயின்ஸ்- இன்ஃபா்மேஷன் சிஸ்டம்,
வேதியியல் பாடங்களில் விஐடி 50 இடங்கள் முன்னேறி உள்ளது. விஐடியின் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 350-ஆவது இடத்துக்குள்ளும், மெக்கானிக்கல், உற்பத்தி பாடங்கள் பிரிவில் 450-ஆவது இடத்துக்குள்ளும் முதன்முறையாக இடம் பிடித்துள்ளது.
க்யூ.எஸ். அமைப்பின் 2020-ஆம் ஆண்டின் ஆய்வு மொத்தம் 48 பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இவை 5 பாடப் பிரிவுகளாக தொகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் சாா்பில் நாட்டில் உள்ள தனியாா் பல்கலைக்கழகங்களில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோா் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதில் விஐடி முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
National University of Technology. VIT tops the charts
VIT University tops the list of Indian Universities The announcement was made by QS UK The organization has released. In a statement released by the VIT University, QSSU, UK, publishes a quality academic curriculum, research papers and industry-affiliated education system at universities worldwide. The ranking system is analyzing and providing evidence. Based on that, VIT is ranked 450 of the world's top universities by 2020. VIT of Indian Universities tops the list.
In Electrical and Electronics Engineering, VIT has jumped 150 places compared to last year and has been in the top 10 in India. Similarly in Computer Science- Information System, VIT has advanced 50 seats in Chemistry. For the first time, VIT is ranked 350th in Chemical Engineering category and 450th in Mechanical and Manufacturing subjects. Kyues. The 2020 review of the organization covers a total of 48 sections. These are grouped into 5 subject sections and published on the basis of rankings. Earlier, it was reported that VIT was the first to implement innovation and entrepreneurship at the private universities in the country.

No comments:
Post a Comment
Please Comment