மாணவர்களின் கூகுளின் தேடுபொறி
மக்களின் தேவை மற்றும் தேடலுக்கு ஏற்ற எண்ணற்ற அப்ளிகேசன்களை வழங்கியிருக்கும் கூகுள், மாணவர் களுக்கும் கிளாஸ்ரூம், லென்ஸ், டிவைஸ் என பலவிதமான அப்ளி கேசன்களை வழங்குகிறது. சொந்த தயாரிப்பு அல்லாத ஏராளமான அப்ளிகேசன்களையும் அது சேகரித்து வினியோகிக்கிறது.
வயதுக்கு ஏற்றவை, குறிப்பிட்ட கல்விக்கு ஏற்றவை, உபயோகத்திற்கு எளிமை யானவை, செலவு குறைந்தவை, இலவசமானவை என பலவிதங்களில் இந்த அப்ளிகேசன்கள் கிடைக்கின்றன.
கூகுள் வழங்கும் பல சேவைகள் தனிப்பட்ட ஒன்றின் சேவையாக அல்லாமல் ஆசிரியர்கள், கல்வி அமைப்புகள், மாணவர்கள் ஆகியோரின் கூட்டமைப்புகளின் சேவையாக இருப்பதால் அதன் திறனும், பலனும் வீரியம் மிக்கதாக உள்ளது.
குறிப்பாக ஒரு கணக்கிற்கு ஒரு விடைதான் என்றாலும் அதற்கு பல வழிகள் இருக்கின்றன என்று அத்தனை வழிகளையும் காட்டுவதாக கூகுளின் சேவைகள் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

No comments:
Post a Comment
Please Comment