மின் கட்டணங்களை
இணையதளம் மூலம் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தல்
மின் கட்டணங்களை
இணையதளம் மூலம் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தல்
சென்னை
மின்வாரிய அலுவலகங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவு வதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. கரோனா வைரஸ் கிருமி கள் பரவுவதைத் தடுக்க, மின் நுகர் வோர் முடிந்த வரையில் இணைய தளம் (www.tangedco.go.in) அல்லது மின்சார வாரிய செயலி (TNEB App) மூலம் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தொலைபேசி (எண்.1912) மூல மாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மின்வாரிய பணம் செலுத்தும் இடங்களிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ளவும் அலு வலர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மின்வாரிய அலுவல கங்களிலும் முழுமையாக கை கழுவு வதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கை கள் பற்றியும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர் களுக்கும் விழிப்புணர்வு எற்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment