தாட்கோ கல்வி கடன் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை
பட்டப்படிப்பு படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்படும்' என, தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழக ஆதி திராவிடர் வீட்டு வசதிi மற்றும் மேம்பாட்டு கழகமான, தாட்கோ சார்பில், ஆதி திராவிட மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்விக்கடன் ஏற்பாடு செய்து தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் படிக்க, 10 லட்சம் ரூபாய் வரையிலும், வெளிநாட்டில் படிக்க, 20 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் கிடைக்கும். இந்த கடனுக்கு, 4.5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
இதுகுறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், தாட்கோ சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடன் விபரம், நிபந்தனைகள் மற்றும் தகுதி விபரங்களை, தாட்கோ அலுவலகம் அல்லது தங்கள் கல்லுாரிகளில், மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
Please Comment