வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு 


சென்னை: வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற இனி ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மின்வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக சென்று புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பிப்பதுடன் சேர்த்து இணையதளம் மூலமாகவும் புதிய இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

இதன் மூலம் பொதுமக்கள் புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் தேதி, வரிசை எண் போன்ற விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு ஆகும். எனவே, தேவை இல்லாமல், மக்களை அலைக்கழிக்க முடியாது. விண்ணப்பம் அளித்த, 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். 

மின் இணைப்பு வழங்க, மின் கம்பம் பொருத்த வேண்டி இருந்தால், 60 நாட்கள், டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் என்றால், 90 நாட்கள் அவகாசம் உள்ளது. இருப்பினும் பலரும் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றே விண்ணப்பித்து வந்தனர். 

இதனை ஒருசில அலுவலகத்தில் மீண்டும் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டயமாக்கப் பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

புதிய மின் இணைப்புக்கு இணையத்தில் விண்ணப்பிப்பது மார்ச் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆவண நகல்களை ஸ்கேன் செய்து www.tangedco.gov.in-ல் பதிவேற்றம் செய்யலாம்.


To get a new electrical connection for homes, apply online only: Tamil Nadu Government Action Directive


Chennai: The Tamil Nadu Government has issued an Action Directive to apply for online homes for new homes. In 2016, a plan to apply for the new connection was introduced through the website, along with the application for the new electrical connection. This will enable the public to request the new connection and the details such as the date of application, the serial number, etc. will be recorded on the computer. So, without the need, people cannot be left out. Annexure must be provided within 30 days of application.

If the power pole is to be supplied, the power pole has to fit 60 days and the transformer has 90 days. However, many applied directly to the office. It has been accused of misappropriating some office. In a statement released by the Ministry of Power and Energy, it said that it is now mandatory to apply online for homes in Tamil Nadu. Applying for the new power line on the Internet has been made mandatory since March 1. You can complete the application and scan the duplicates and upload them to www.tangedco.gov.in

No comments:

Post a Comment

Please Comment