முல்லைப் பெரியாறு அணையைக்கட்டிய ஜான் பென்னிகுவிக் நினைவு தினம் இன்று.( 09 மார்ச் 1911 ) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முல்லைப் பெரியாறு அணையைக்கட்டிய ஜான் பென்னிகுவிக் நினைவு தினம் இன்று.( 09 மார்ச் 1911 )

முல்லைப் பெரியாறு அணையைக்கட்டி
தமிழர்களின் பஞ்சம் போக்கிய பெருமகன்,
“மனிதப் புனிதர்”
ஜான் பென்னிகுவிக்
(John Pennycuick)
நினைவு தினம்  இன்று.
( 09 மார்ச் 1911 )
இணைப்பில்  தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் கடந்த 2013 ல் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் உருவாக்கி திறந்து வைக்கப்பட்ட “ஜான் பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம்”  மற்றும்  சிலை. 

ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தின் ராணுவப்பணி பொறியாளரான இவர்  சென்னை மாகாண அரசின் பொதுப்பணித்துறை பொறியாளர், செயலாளராக மற்றும் சட்டமன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.


தென் தமிழகமான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் வசதி இல்லாததினால் பஞ்சத்தில் உழல்வதை கண்ட இம்மகான் ஆங்கிலேய அரசிடம் போராடி நிதி பெற்று முல்லைப்பெரியாறுஅணையைக் கட்டினார். கட்டும்போது ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் அணை உடைந்து பெரும் சேதமானது. மீண்டும் நிதிக்காக இவர் சென்றபோது ஆங்கிலேய அரசு திட்டமிடாத பணி என்றுகூறி நிதி உதவியையும் மறுத்து, இவரை பணிநீக்கம் செய்தது.

மனம் தளராத இம் மனிதப்புனிதர் இங்கிலாந்து சென்று தன் பூர்வீகச்சொத்துக்களையும், தன் குடும்பத்து விலை மதிப்பில்லா ஆபரணங்களையும் விற்றும், தனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களிடம் பண உதவி பெற்றும் மீண்டும் அரசிடம் போராடி அனுமதி பெற்று வெற்றிகரமாக அணையைக்கட்டி தமிழக மக்களின் பஞ்சம் போக்கினார்.

எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயர் தன் சொத்தை விற்று நம் பஞ்சத்தை தீர்த்துள்ளார், ஆனால் இங்கோ நம்மை ஆண்டவர்களும் ஆளுகின்றவர்களும் கொள்ளையடிக்க கற்றுள்ளார்களே தவிர மக்களுக்கு நல்லது செய்ய கற்கவில்லை.

நமது சில ஈன அரசியல்வாதிகள் இவரின் மலத்தை புசிக்கக்கூட அருகதையற்றவர்கள்.

இவரின் கதையைத்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் “லிங்கா” என்ற பெயரில் திரைப்படமாக்கினார்.

No comments:

Post a Comment

Please Comment