`பள்ளியை மூடப்போறாங்கனதும் அதிர்ச்சியாகிட்டேன்!' மாணவர்கள் வருகையை அதிகரிக்க உதவிய ஆட்டோ டிரைவர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`பள்ளியை மூடப்போறாங்கனதும் அதிர்ச்சியாகிட்டேன்!' மாணவர்கள் வருகையை அதிகரிக்க உதவிய ஆட்டோ டிரைவர்

`பள்ளியை மூடப்போறாங்கனதும் அதிர்ச்சியாகிட்டேன்!' மாணவர்கள் வருகையை அதிகரிக்க உதவிய ஆட்டோ டிரைவர் 



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தாந்தாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 64 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இங்கு மிகவும் குறைவாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது சற்று உயர்ந்துள்ளது. 

ஸ்மார்ட் கிளாஸ் ரூம், ஆங்கிலப்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட ஆசிரியர்களின் முயற்சிகள் மாணவர் சேர்க்கை அதிகரிக்கக் காரணங்கள் என்றாலும், இன்னொரு முக்கியமான காரணமும் ஒன்று உள்ளது. அது இதே கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவர் செய்துவரும் உதவி. 

இவரின் உதவியும் மாணவர்களைப் பள்ளியை நோக்கி ஈர்த்துள்ளது என்கின்றனர் அப்பள்ளி ஆசிரியர்கள்.2 கிலோமீட்டர் தூரம் நடந்துவந்து படித்துக்கொண்டிருந்த மாணவர்களை, அவர்களின் வீட்டுக்கே சென்று, தனது ஆட்டோவில் இலவசமாக ஏற்றிக்கொண்டு வந்து பள்ளியில் விடுகிறார். 

இவரின் முயற்சியால் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடையில்லாமல் பள்ளிக்கு வருகின்றனர். ஆட்டோ டிரைவர் சுரேஷிடம் பேசினோம், ``வழக்கமாக, பள்ளி ஹெட் மாஸ்டர் அம்மா என்னோட ஆட்டோவில் பள்ளிக்கூடத்துக்கு வருவாங்க. 

அப்படி ஒரு நாள் வரும்போது, ``மாணவர் சேர்க்கை குறைஞ்சிருச்சு தொடக்கப்பள்ளியை இன்னும் கொஞ்சம் நாள்ல மூடினாலும் மூடிடுவாங்க. தாந்தாணியில் உள்ள பிள்ளைங்க எல்லாம் பிரைவேட் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க. துவரடிமனை பிள்ளைங்கதான் வந்துக்கிட்டு இருந்தாங்க. 

அவங்களும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வரணும். நடந்து வர முடியாதுங்கிறதால, பெற்றோர்களே பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டேங்கிறாங்க... என்ன செய்றதுன்னே தெரியலை"னு சொன்னாங்க. அதைக் கேட்டதும் எனக்கு ரொம்பவே கஷ்டமா போச்சு.

உடனே, ஆட்டோவ எடுத்துக்கிட்டு அந்தக் கிராமத்துக்குப் போனேன். அந்தப் பெற்றோர்களிடம் விசாரிச்சேன். ``நாங்க கூலி வேலைக்குப் போறோம், பிள்ளைகளைக் கூட்டிவிட்டு வந்துவிட்டுட்டுத் திரும்பக் கூட்டிக்கிட்டு வர முடியாது. 

பள்ளிக்குப் போய்விட்டு, பிள்ளை வீட்டுக்கு வர்ற வரைக்கும் உசுர கையில பிடிச்சிக்கிட்டு இருக்கணும்"னு சொன்னாங்க.அப்பத்தான், இந்தப் பிள்ளைகளை இலவசமாகப் பள்ளிக்கு அழைச்சிட்டு வரலாம்னு முடிவு பண்ணேன். 

``தினமும் ஆட்டோவில் உங்க பிள்ளைகளை ஸ்கூலுக்குக் கொண்டுபோய் விடுறேன் உங்களுக்குச் சம்மதமா?"னு கேட்டேன். பெற்றோர்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். ஆரம்பத்துல எங்க வீட்டுல உங்களுக்கு எதுக்கு இந்த வேலைன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் என்னோட நோக்கத்தைப் புரிஞ்சிக்கிட்டு ரொம்பவே சப்போர்ட் 

பண்றாங்க. தினமும் 4 ஷிப்ட் அடிக்கணும். மாணவர்களைப் பள்ளிக்கூடத்துல கொண்டுவந்து விட்டதுக்கு அப்புறம்தான் சவாரி எல்லாம். இப்படி பசங்களைப் பள்ளிக்கூடத்துக்கு ஆட்டோவுல அழைச்சிட்டு வந்து, திரும்ப கூட்டிட்டுப் போற பழக்கம் ஆரம்பிச்சி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. 

இப்போ, சில பெற்றோர்கள் தாங்களாவே முன்வந்து டீசல் செலவுக்குப் பணம் கொடுக்கிறாங்க. அவங்களா கொடுக்கும்போது வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்கிறேன். நான் படிச்ச பள்ளிக்கூடம் இது. இப்போ, என் பிள்ளையும் இங்கதான் படிக்குது. 


இது எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடவிடக்கூடாது" என்கிறார் தீர்க்கமாக. இதுபற்றி பள்ளி தலைமையாசிரியர் ராணி கூறும்போது, ``இலவசமா பள்ளிக்கு ஆட்டோ ஓட்டின நேரத்தில்கூட டீசல் செலவுக்காவது இந்தப் பணத்தை வெச்சுங்க தம்பின்னு என்னோட பணத்தைக் கொடுப்பேன். 

அப்பக்கூட அந்தத் தம்பி வேண்டாம்னு சொல்லிடும்.இப்போ பிள்ளைகளின் பெற்றோர்களே முன்வந்து நாங்க அவருக்குப் பிள்ளைகளைக்கூட்டிக்கிட்டு வர பணம் கொடுக்கிறதா சொன்னாங்க. தாராளமாகக் கொடுங்கன்னு சொன்னேன். 

தொடக்கப்பள்ளியில் படிக்கிற பாதி பிள்ளைகளுடைய சேர்க்கை அதிகரிக்க சுரேஷ் தம்பிதான் காரணம். தற்போது, சுரேஷ் மாதிரி, இளைஞர்கள் பலரும் முன்வந்து பள்ளிக்குப் பல அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். இது தொடர்ந்தால், மாவட்டத்தில் தாந்தாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்மாதிரிப் பள்ளியாக மாறும்" என்றார்.


I was shocked at the closure of the school! ' The auto driver who helped increase the attendance of students


64 students study at Tandani Panchayat Union Primary School near Aranthangi, Pudukkottai District. The number of students, which was very low until last few years, is now slightly higher. Although the efforts of teachers, including smart classrooms and English tutors, to increase student enrollment, there is another important factor. It was the help of Suresh, an auto driver from the same village. The school's teachers say that their help has attracted students to the school.

With his efforts, more than 25 students come to the school uninterrupted. We spoke to Auto Driver Suresh, “Usually, the Headmaster of the school, Mother, accompanied me to the school. When that day comes, `` `` `` `` `` `` `` `` `` `` ` Pillaianga in Thandani Everything went to private school. Dwaradimana Pillaiinga had come to visit. They also have to walk 2 kilometers. If I can not walk, the parents do not send their children to school ... I do not know what to do. "

I inquired with the parents. “We go to work, we can not bring the children back together and return. After leaving school, the child will stay home until the child gets home. " Parents are very happy. In the beginning, where do you have a job. Understand the purpose of my support. Beat 4 shift daily.

The ride is all that has brought the students to school. It was over two years before the autos were brought to school, and the habit of getting back together. Now, some parents volunteer to pay for diesel. When I give them, I do not buy. This is the kind of grad school I am. Now, here is my child's step. The school head queen said, “I will give the money to Thambinna to save this money at the cost of diesel, even when driving to school for free.

The parents of these children will come forward and tell us if we will give him money to come together. Give me generously. Suresh Thambidhi is responsible for increasing the enrollment of half the children in elementary school. At present, many young people have come up with the basic needs of the school, like the Suresh model. If this continues, Tandani Panchayat Union Primary School in the district will become an exemplary school. ”

No comments:

Post a Comment

Please Comment