இன்று ஓய்வுபெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு. தமிழக அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் இன்றுடன் ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து , தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இப்பணியில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கண்விழித்து பணி புரிந்து வருகின்றனர்.
இச்சூழலில், தமிழகத்தில் இன்றுடன் (மார்ச் 31) ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோருக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு ஒப்பந்த முறையில் பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, ஓய்வுக்குப்பின், ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் அவர்கள் பணியைத் தொடர தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:
Post a Comment
Please Comment