ரத்து செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளுக்கு
கட்டணம் திரும்பப்பெறும் விதிமுறைகள் தளர்வு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் பயணங்களை ரத்து செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை திரும்பப்பெறும் விதிமுறைகளை ரெயில்வேத்துறை தளர்த்தி உள்ளது. அந்தவகையில் கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்பப்பெறும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி மார்ச் 21 முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள், பயண தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் டிக்கெட்டை ஒப்படைத்து கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது இதற்கு வெறும் 3 மணி நேரமே வழங்கப்பட்டு இருக்கிறது.
இதைப்போல ரெயில் ரத்து செய்யப்படாமல், பயணியே தனது பயணத்தை ரத்து செய்வதாக இருந்தால், 30 நாட்களுக்குள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இது தற்போது 3 நாட்களாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எண் ‘139’ மூலம் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கும் 30 நாட்களுக்குள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அதேநேரம் இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை திரும்பப்பெற தற்போதைய விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படும் என ரெயில்வே அறிவித்து உள்ளது.

No comments:
Post a Comment
Please Comment