ஆசிரியர்கள் கேரளா பயணம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர்கள் கேரளா பயணம்

ஆசிரியர்கள் கேரளா பயணம் 

தமிழகத்தைச் சேர்ந்த, 1,200 ஆசிரியர்கள், களப்பயணமாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில், 2019 - 20ம் கல்வி யாண்டில், 'டீச்சர்எக்சேஞ்ச் புரோகிராம்' என்ற தலைப்பில், களப்பயணi திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்வி மாவட்டத்துக்கு, ஆறு பட்டதாரி ஆசிரியர்கள், நான்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 10 பேர் வீதம், 120 கல்வி மாவட்டங்களில் இருந்து, 1,200 ஆசிரியர்கள், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள தேசிய விண்வெளி ஆய்வு மையம், அருங்காட்சியகங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இங்கு, விண்வெளி தொடர்பான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment