தகுதி தேர்வு அவகாசம் நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தகுதி தேர்வு அவகாசம் நீட்டிப்பு

தகுதி தேர்வு அவகாசம் நீட்டிப்பு 

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 5ல் நடக்க உள்ளது. இதில், பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் பதிவு, ஜன., 24ல் துவங்கியது. மார்ச், 2 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், வரும், 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.தேர்வு கட்டணத்தை, மார்ச், 13 வரை செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, www.ctet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment