கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி
சமூக இடைவெளியை செயல்படுத்திய பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் சமூக இடைவெளி அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், அமைச் சர்களின் இருக்கைகளுக்கு நடுவே 3 அடிக்கும் மேல் இடைவெளி விடப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் இடைவெளி விட்டு அமர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் கரோனா வைரஸ் சோதனை ஆய்வகங்களை அமைப்பதற்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ரயில்வே துறையில் இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல் பட வசதியாக ஒப்பந்தம் செய்து கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பயம் வேண்டாம்
இதனிடையே நேற்று ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியதாவது:
21 நாள் ஊரடங்கு அமல்படுத் தியிருப்பதால் மக்கள் பீதி அடையவேண்டாம். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வோம். இதற்குத் தேவையான ஏற்பாடுகள் மாநில அரசால் செய்யப்படும். சுகாதாரமான இந்தியா அமைய கரோனா வைரஸை எதிர்கொள்வோம். வீடுகளுக்குள்ளே மக்கள் இருக்க வேண்டும். பொருட்கள் வாங்க வருவது என்று கூறி கடைகளில் கூடி கரோனா வைரஸை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
Please Comment