பொதுத்தேர்வு: மின்தடை வேண்டாம் - மின்வாரியம் அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறுவதையொட்டி பராமரிப்புப் பணிக்கான மின்தடை செய்ய வேண்டாமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பராமரிப்புப் பணிக்காக காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்த விவரங்களை மின்சார வாரியம் முன்னதாகவே பொதுமக்களுக்கு அறிவிக்கும். இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து மாா்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் மாணவா்களுக்கு போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதை செயல்படுத்தும் வகையில் எந்தப் பகுதியிலும் பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்ய வேண்டாம் என பொறியாளா்களுக்கு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், அவசர மின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய இடங்களுக்கு மட்டும் உயரதிகாரிகள் ஒப்புதல் பெற்று மின்தடை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
General Elections: No Resistance - Electricity Instruction
Chennai: The Electricity Board has advised not to impede maintenance work due to the general election in Tamil Nadu. It is supplied from 9 am to 5 pm for maintenance work in various locations throughout the state. The Electricity Board will announce the details to the public in advance. As a result, the Plus 2 general election in Tamil Nadu is taking place on the 1st. The tenth general election will be held from March 27 to April 13.
The school department has advised students to ensure that they have access to all facilities, including transport and electricity. In order to enable this, engineers are advised not to interrupt the maintenance work in any area. Further, it is advised that the authorities have to get approval and restrain only those areas where urgent electrical maintenance is required.

No comments:
Post a Comment
Please Comment