பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்!
பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்!
மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்!
ஒரு நிலத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்கும்போது அதில் வில்லங்கம் இல்லாமல் மோசடியை தவிர்த்து நிலம் வாங்குவது எப்படி என்பதற்கு இணையத்தின் மூலம் ஒரு எளிய வழி உள்ளது.
நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரம் மிக முக்கியமான ஒன்று.
உண்மையை போலவே போலி பத்திரங்களை உருவாக்கி வைத்து ஏமாற்றும் மோசடி பேர்வரிகளும் உண்டு. இதுபோன்ற தவறான நபர்களிடம் இருந்து உண்மையான தகவல்களை பெற வேண்டும் எனில் நில உரிமையாளர்களின் பக்கத்து வீட்டார் அல்லது பக்கத்து நில உரிமையாளர் ஆகியோரிடம் சந்தேகத்திற்காக விசாரிப்பது பழைய வழக்கம் ஆகும்.
நேரில் சென்று பார்த்து போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் சரியான நடவடிக்கை எடுத்த பின்னும் சில இடங்களில் போலியான மோசடி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இனி யாரிடமும் ஏமாறாமல் இருக்க இணையத்தின் மூலம் உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது.
ஒருவரின் பத்திரம் உண்மையானதுதானா.? அது அவர்களின் பெயரில்தான் இருக்கிறதா என்பதை அறிய இனி கண்டபடி அலையத் தேவையில்லை. அதனை எளிதில் கண்டறியும் வகையிலும், அதற்கான முழுவிவர இணைய முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான மூன்று தகவல்களை பதிந்தால் உங்களுக்கான உண்மைத் தகவல் கிடைக்கும்.
முதலில் சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் எண், பதிவு செய்த வருடம் ஆகிய மூன்றையும் சரியாக பதிவு செய்தால் பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும்.
அந்த பத்திரம் யார் பெயரில் இருக்கிறது. ஏமாற்றம் குறித்து கவலை கொள்ளத் தேவை இல்லை. தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது நிலம் உங்கள் பெயரில் இருக்கிறதா என்பதையும் இந்த இணையதள முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி: http://ecview.tnreginet.net/
You can check the name of the deed on the Internet!
You can check the name of the deed on the Internet!
Know the Right Way to Avoid Fraud! There is a simple way to go through the internet on how to buy a land from another and avoid cheating in it. The deed is the most important thing to buy and sell land.
The truth is, there are fraudulent fraudsters who create fake bonds. It is customary to inquire with the landlord's neighbor or the landlord for suspicion if they need to get real information from such wrong people. Fake fraud cases are still occurring on the state's behalf, even after the government has taken appropriate action to prevent fraudulent use of a fake bond.
The government has made it possible to find out the real information via the internet so that no one can be deceived. Is someone's bond genuine? No longer need to wander around to see if it's in their name. It is provided with a full web address for easy detection. It contains the three most important information for you.
If the sub-register office, deed number and year of registration are properly registered, the deed will be released. The deed is in the name of who. There is no need to worry about disappointment. Take advantage of those who need it. You can also find out if your land is in your name. Website address: http://ecview.tnreginet.net/

No comments:
Post a Comment
Please Comment