கால் வலி தாங்க முடியலையா இதோ சிம்பிள் வீட்டு மருத்துவம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கால் வலி தாங்க முடியலையா இதோ சிம்பிள் வீட்டு மருத்துவம்

💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡

*💗உடல் நலம்....*

*கால் வலி தாங்கமுடியலையா?* 
*இதோ சிம்பிள் வீட்டு மருத்துவம்!*

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கால் வலியோ, மற்ற நோய்களோ அவர்களை தாக்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கு காரணம் என்னவென்றால், நம் முன்னோர்கள் உணவாக எடுத்துக்கொண்ட சத்தான உணவுப்பொருட்களும், பழக்கவழக்கங்களும்தான். ஆனால், இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவினை இழந்து கால் வலியாலும், பெயர் தெரியாத பலவகை நோயாலும் அவதிப்படுகின்றனர்.

கால் வலி மற்றும் கால் சோர்வை விரைவில் குணப்படுத்த தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடிக்க வேண்டும். முழங்கால்களில் வலி ஏற்படும்போது, அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் முழங்கால் வலிகள் முற்றிலும் குணமாகும்.

தூங்கும்போது கால்களுக்கு அடியில் தலையணை வைத்து தூங்குவதன் மூலம் கால்கள் வலிக்காமல் இருப்பதோடு, மெதுமெதுப்பான இடத்தில் கால்களை வைத்து தூங்குவதால் தூக்கமும் நன்றாக வரும். ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் ஒரு டேபிள் ஸ்பு+ன் காட்-லிவர் எண்ணெயை கலந்து, படுக்கப்போகும் முன்பு குடிப்பதால் கால் வலி குணமடையும். மேலும் உடலில் இருக்கும் சோர்வும் நீங்கும்.

கால்களை நன்கு மடக்கி நீட்டுவதன் மூலமும், கால் வலியை எளிதில் குணமாக்க முடியும். மேலும் இது ஒரு சிறந்த உடற்பயிற்சி. இப்பயிற்சியை தண்ணீரை குடிக்கும் போதெல்லாம் செய்து வந்தால் கால் வலியானது வராமல் இருப்பதோடு, கால்களும் சோர்வடையாமல் இருக்கும்.

கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க, ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் எளிமையாக கால் வலியினைப் போக்கலாம்.

பெண்கள் கால் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அதிகமான உயரம் கொண்ட காலணிகளை அணிவதால் இடுப்பு வலியுடன், கால் வலிகளும் ஏற்படுகின்றன. பெண்கள் அதிகமான உயரம் கொண்ட காலணிகளை அணியாமல் தவிர்ப்பதன் மூலம் கால் வலியிலிருந்து தப்பிக்க முடியும்.

அன்றாட உணவில் கீரைகள், பழங்கள், காய்கறிகள், மூலிகை சூப் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. கை, கால்களை நன்கு வீசி நடக்க வேண்டும்.

*பகிர்வு*

💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡

No comments:

Post a Comment

Please Comment