டி.என்.பி.எஸ்.சி தேர்வு: ஆன்லைன் மூலம் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் முறை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டி.என்.பி.எஸ்.சி தேர்வு: ஆன்லைன் மூலம் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் முறை!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு: ஆன்லைன் மூலம் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் முறை!

தேர்வு முறைகேடு புகார் எதிரொலியாக இனி வரும் தேர்வுகளின் வினாத்தாள்களை வாகனங்களில் அனுப்பாமல் ஆன்லைன் மூலம் தேர்வு மையங்களுக்கு அனுப்ப டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. 

குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளில், முறைகேடுகளில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளின் வினாத்தாளை முன்கூட்டியே இடைத்தரகர்கள் கைப்பற்றி, 

அதன் மூலம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வினாத்தாள்களை பாதுகாப்புடன் தயாரிப்பது, தேர்வு மையங்களுக்கு வினாத்தாளை அனுப்புவதில் புதிய முறைகளை அமல்படுத்துவது குறித்து தேர்வாணைய உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனையின் முடிவில், தற்போது வினாத்தாள் தயாரிப்பில் உள்ள ஆசிரியர்கள் குழுவை கலைத்து விட்டு, துறை சார்ந்த நிபுணர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வினாத்தாளை தயாரித்த பின்னர், வரிசை எண் மாற்றப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வினாத்தாள்களை தேர்வர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வழங்குதல், வினாத்தாள்களை வாகனங்களில் அனுப்பாமல் இணையதளம் வழியே மையங்களுக்கு அனுப்புதல், 

வினாத்தாளை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கு ரகசிய குறியீட்டு எண்ணை அறிமுகம் செய்தல் போன்ற புதிய மாற்றங்களை அமல்படுத்தவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முறைகேடு புகாரைத் தொடர்ந்து, ஏற்கனவே 12 வகையான தேர்வு சீர்திருத்தங்களை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம் செய்துள்ள நிலையில், வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வழங்கலில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்களும் புதிய சீர்திருத்தங்களாக அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


TNPSC Exam: Sending Questionnaire to Exam Centers Online!


In response to the complaint of selection malpractice, TNPSC has decided to send online questionnaires to the examination centers without sending vehicles in the future. Has decided. CBCID has arrested more than 40 people involved in scams, including Group 1 and Group 2. Police are investigating. The intermediaries seized on the questionnaire of the TNPSC examinations and thereby revealed the involvement of the selection process. Subsequently, the members of the selection committee consulted on the preparation of questionnaires in safety and the implementation of new methods of sending the questionnaire to the examination centers. 

At the end of the consultation, it has been revealed that the teachers who are currently preparing the questionnaire have decided to dissolve the group and engage the experts in the field.The results have been reported. Following the abuse complaint, TNPSC has already introduced 12 types of choice reforms. Given the introduction, the changes that will be made in the preparation and presentation of the questionnaire will be announced as new reforms.

No comments:

Post a Comment

Please Comment