குழந்தைகளைக் குதூகலப்படுத்த வன விலங்குகளை வீட்டுக்கே அழைத்து வரும் கூகுள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளைக் குதூகலப்படுத்த வன விலங்குகளை வீட்டுக்கே அழைத்து வரும் கூகுள்!

குழந்தைகளைக் குதூகலப்படுத்த வன விலங்குகளை வீட்டுக்கே அழைத்து வரும் கூகுள்! 

கூகுள் வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்பம் மூலம் வீட்டில் அடைப்பட்டுக் கிடப்பதாய் உணரும் குழந்தைகளை மகிழ்விக்க முடியும் என்றுள்ளது கூகுள் நிறுவனம். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பல நாடுகளும் ஊரடங்கு முறையைப் பின்பற்றி வருகின்றன. பெரியவர்களுக்கே வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பது மன உளைச்சலை அளிக்கும் வேளையில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் குழந்தைகளை மகிழ்விக்க புதிய தொழில்நுட்ப அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. 


 கூகுள் 3டி ஹோலோகிராம் மூலம் காட்டு வீலங்குகளை வீட்டுக்குள் அழைத்து வர முடியும். இதன் மூலம் குழந்தைகளை சிறுது நேரம் மகிழ்விக்க முடியும். இந்த சமயத்தைப் பயன்படுத்தி பெற்றோர்களும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க முடியும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது கூகுள். இந்த ஆப்ஷனைப் பயன்படுத்த: 

 1. உங்கள் போன் மூலம் கூகுள் தளம் சென்று ஏதோ ஒரு விலங்கின் பெயரை டைப் செய்யுங்கள். உதாரணமாக, புலி எனத் தேடுகிறீர்கள் 

 2. முதல் பக்கத்தில் விக்கிப்பீடியா விளக்கத்துக்குக்க் கீழ் புலியின் 3டி உருவம் இடம் பெற்றிருக்கும். அதன் பக்கத்தில் View in 3D என்ற ஆப்ஷன் இருக்கும். 


 3. உங்கள் திரையில் தெரியும் 3டி விலங்கின் புகைப்படத்தை உங்கள் விரல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அசைக்க முடியும். 

 4. View in your space ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 

 5. கூகுளுக்கு உங்கள் மொபைல் கேமிரா ஆக்சஸ் அளிக்கவும். சிங்கம், புலி, கரடி, ஆடு, ஓநாய், பென்குயின் என பல விலங்குகளை உங்கள் குழந்தைகளுக்காக வீட்டுக்கே அழைத்து வர முடியும்.


No comments:

Post a Comment

Please Comment