சுவாரஸ்யமான தொழில் நுட்ப தகவல்களை தெரிந்து கொள்ளலாம்!!!
◆யாகூவின் உண்மையான பெயர் மௌத்ஃபுல். யாகூவின் ஒரிஜினல் URL akebono.stanford.edu. கல்லீவர்ஸ் ட்ராவல் என்ற புத்தகத்தில் இருந்து தான் பிறகு யாகூ என்ற பெயர் தோன்றியது. இது போல அமேசானின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?? கேடப்ரா.காம் (Cadabra.com). அமேசான் முதலில் புத்தங்கள் விற்கப்படும் ஒரு ஆன்லைன் தளமாக இருந்தது.
◆வார்த்தைகளை பிழை இல்லாமல் எழுதுவதற்கு தான் எல்லோரும் கூகுளை பயன்படுத்தி வருகின்றனர். 97 சதவீத நபர்கள் அவர்கள் டைப் செய்யும் ஸ்பெல்லிங் சரியா என்பதை அறிய கூகுளை பயன்படுத்துகின்றனர்.
◆’ஆட்டோகரக்ட்’ என்ற அம்சம் தற்போது தான் பிரபலமாகி உள்ளது. முதன் முதலாக ஆட்டோகரக்ட் செய்யப்பட்ட வார்த்தை ‘Teh’.
‘Teh’ யை ‘The’ வாக ஆட்டோகரக்ட் செய்ய நீங்கள் இடதுபுறத்தில் உள்ள ஏரோவையும் DE யையும் அழுத்த வேண்டும். இப்போது எல்லாம் இதனை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதுவே ‘ஆட்டோகரக்ட்’ ஆகி கொள்கிறது. நம் வேலை எத்தனை சுலபமாகி விட்டது.
◆ஆன்டுராய்ட் என்பது ஒரு ஆண் என்று சொன்னால் நம்புவீர்களா??? உண்மை தான். ஆன்டுராய்ட் என்பது மனித தோற்றம் கொண்ட ஒரு ஆண் ரோபோட். இதுவே பெண்ணாக இருந்தால் அதனை “Gynoid” என்று அழைக்க வேண்டும்.
◆ஒவ்வொரு மாதமும் கூகுளில் பல பில்லியன் தேடுதல்கள் நிகழ்கிறது. சரியாக சொன்னால் ஒரு மாதத்திற்கு 35 பில்லியன் தேடுதல் கூகுளில் நடைபெறுகிறது. மே மாதம் 2019 ல் முதல் மூன்று இடத்தை பிடித்த அதிகமாக தேடப்பட்ட வார்த்தையில் ‘பேஸ்புக்’ 233 மில்லியன் தேடுதல்களோடு முதல் இடத்தையும், ‘யூடியூப்’ 194 மில்லியன் தேடுதல்களோடு இரண்டாவது இடத்தையும், ‘அமேசான்’ 103 தேடுதல்களோடு மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
◆உங்களது போன் வைப்ரேட் ஆகாமலே உங்களுக்கு அப்படி ஒரு உணர்வு தோன்றினால் அதற்கு “பேன்டம் வைப்ரேஷன் சின்ட்ரோம்” (Phantom Vibration Syndrome) என்ற பெயர் உண்டு. போனில் அதிகமாக மூழ்கியவர்களுக்கு இந்த கோளாளு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கோளாறு உங்களுக்கு இருக்கின்றதா???
◆புகைப்பிடித்தால் ஆப்பிள் வாரன்டி இல்லாமல் போய்விடும். என்ன ஒரு ஆச்சரியம். ஆப்பிள் கணினியை நீங்கள் பயன்படுத்தும் போது புகைபிடித்தால் உங்களின் ஆப்பிள் வாரன்டி முழுவதுமாக நீக்கப்படும். ஆப்பிள் கணினியின் அருகில் புகைப்பிடித்தலை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.
◆2012 மட்டும் ஆறு பெண் குழந்தைகளுக்கு ‘ஆப்பிள்’ என்றும், 49 ஆண் குழந்தைகளுக்கு ‘மேக்’ என்றும் 17 பெண் குழந்தைகளுக்கு ‘சிரி’ என்றும் பெயரிடப்பட்டது. 2015 ல் பிறந்த பெண் குழந்தைகளுக்கு இட்ட பெரும்பாலான பெயரில் 32 வது இடத்தை பிடித்தது ‘அலெக்ஸா’ ஆனால் இது 2018 ல் 90 வது இடத்திற்கு சென்று விட்டது.
◆கண் இல்லாதவர்கள் கூட மொபைல் போனை பயன்படுத்த முடியும். கண் இல்லாதவர்கள் போனை பயன்படுத்தும் விதமாக சிறப்பு ப்ரெய்லி தொழில்நுட்பம் உள்ளது. இதில் சிறப்பு வாய்ந்த பின்கள் மேலேயும் கீழேயும் சென்று அதற்கான தகவலை பெற உதவுகிறது.
◆கூகுளின் முதல் ட்வீட்டை நீங்கள் படித்ததுண்டா??? ஒரு சாதாரண மனிதருக்கு அது முட்டாள்தனமாக தெரியும். அதாவது .“I'm 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010" இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது நான் அதிர்ஷ்டசாலி என்ற அர்த்தத்தில் “I’m feeling lucky” என்று மொழி பெயர்க்கலாம்.
Interesting technical information can be found !!!
Yahoo's real name is Mouthful. Yahoo Original URL akebono.stanford.edu. The name Yahoo originated from Gulliver's Travel. Do you know what Amazon's real name is like ?? Cadabra.com (Cadabra.com). Amazon was originally an online platform that sells Buddhas.
Everyone is using Google to write words without error. 97% of people use Google to check if the spelling they type is correct.
◆ The first autocorrelated word is Teh telephone. You need to press the Aero and DE on the left to autocorrect the Teh Number. There is no need to press everything now. That's what autocorrect is. How easy our job is.
◆ Don't believe if android is a male ??? That's true. Android is a male robot with human origins. If this is a woman, it should be called "Gynoid".
◆Google generates billions of searches every month. Appropriately, 35 billion searches occur on Google a month. In May 2019, the top three most-searched words were Facebook's Facebook First with 233 million searches, YouTube YouTube with 194 million searches, and Amazon with 103 searches.
◆If you feel that your phone is not vibrating, it has the name "Phantom Vibration Syndrome". Researchers say the problem is caused by people who drown too much. Do you have this disorder ???
◆Smoking leaves Apple without warranty. What a surprise. If you smoke while using the Apple computer, your Apple warranty will be removed completely. Apple has banned smoking near the computer.
◆ 2012 alone was named the Apple iPhone for Six Girls, 49 Macs for Kids and 17 Girls for the iPhone. Alexa was ranked 32nd in most of the names given to women born in 2015, but it has reached 90th place in 2018.
◆Even people without an eye can use a mobile phone. There is a special braille technology for people who do not use the phone. The special pins can go up and down and get the information.
◆Did you read the first tweet from Google ??? A normal person knows it is stupid. “I'm 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010".This means "I'm feeling lucky."

No comments:
Post a Comment
Please Comment