வரலாற்றில் இன்று 23/03/2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரலாற்றில் இன்று 23/03/2020

*வரலாற்றில் இன்று*
23/03/2020-திங்கள்
*=========================*


*1752* : கனடாவின் முதலாவது பத்திரிக்கை 
த ஹலிபாக்ஸ் கெசட்  வெளியிடப்பட்டது.

*1801* : ரஷ்யப் பேரரசர் முதலாம் பவுல் அவரது படுக்கை அறையில் வாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

*1857* : நியூயார்க்கில் ஒரு அங்காடியில் எலிஷா ஓடிஸ்  என்பவரால் முதன்முதல் லிப்ட் அமைக்கப்பட்டது.

*1868* : கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

*1880* : விஸ்கொன்சின் மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஸ்டீவன்ஸ் என்பவர் மாவு உருட்டல் ஆலைக்குக் காப்புரிமை பெற்றார்.

*1907* : லண்டனில் மீட்டர் பொருத்தப்பட்ட டாக்ஸி கார்கள் முதன்முதல் அறிமுகமானது.

*1919* : இத்தாலியின் மிலன் நகரில் முசோலினி பாசிஸ்ட் கட்சியைத் துவக்கினார்.

*1931* : காவல்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த குற்றத்தின் தீர்ப்பு படி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூவரும் மாலை 07:00 மணிக்கு லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

*1933* : ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார்.

*1942* : இரண்டாம் உலகப்போர்:- அந்தமான், நிக்கோபார் தீவுகளை ஜப்பான் படைகளும், தேசிய ராணுவப் படைகளும் சேர்ந்து கைப்பற்றின.

*1956* : பாகிஸ்தான் உலகின் முதலாவது இஸ்லாம் குடியரசு நாடானது.
சூடான் குடியரசு நாடாக அறிவித்தது.

*1982* : குவாட்டமாலா அரசு ராணுவப் புரட்சியில் 
கவிழ்ந்தது.


*1991* : சியேரா லியோனில் 11 ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

*1994* : சைபீரியாவில் ரஷ்ய விமானம் விழுந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

*1998* : 70 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் டைட்டானிக் படத்திற்கு 11 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது.

*2008* : ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டது.

*2019* : மாலியில் வேட்டைக்காரர்கள் நடத்தியத் தாக்குதலில் 130 க்கும் மேற்பட்ட ஃபுலானி மக்கள் கொல்லப்பட்டனர்.
Srinivasan-Kpm

No comments:

Post a Comment

Please Comment