சளி, காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.. அரசு சுற்றறிக்கை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சளி, காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.. அரசு சுற்றறிக்கை!

சளி, காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.. அரசு சுற்றறிக்கை!


சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்தது. ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும் ஓமனில் இருந்து காஞ்சிபுர்ம திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. இதனிடையே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை, தாய், குழந்தை, 

இரு உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 

இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து துறைகளுக்கும் வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேரளாவில் மீண்டும் பரபரப்பு.. ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 39 பேர் பாதிப்பு! மாணவர்கள் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். 

மாணவர்கள் தங்கள் கைகளை தூய்மையாக வைக்கும் பொருட்டு அடிக்கடி தங்களை கைகளை கழுவ வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட வேண்டும். காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 

கொரோனா குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Students should avoid attending school if they have colds or flu .. Government Circular!


CHENNAI: With the spread of coronavirus in India, the Tamil Nadu school education department has issued a circular to prevent students from coming to school with symptoms like colds, flu and cough. The number of coronavirus cases in India was 31. Coronavirus confirmed yesterday that two persons from Ladakh from Iran and one from Kanchipuram returned from Oman. The number of people infected with the virus has risen to 34. Meanwhile, five people from the same family have been infected with coronavirus. Coronavirus has been confirmed for father, mother, child and two relatives from Patinamitta district.

It is revealed that they arrived from Italy on the 29th of last month. It is advised to avoid meeting with the public. On behalf of the Tamil Nadu School Education Department, all departments should be aware of the virus. Coronation in Kerala again, 5 people in one day Students should use handkerchiefs when they cough and sneeze. Students often wash their hands in order to keep their hands clean. Avoid going to crowded places. Students should avoid attending school if they have fever and colds. The circular stated that students should be made aware of the corona.

No comments:

Post a Comment

Please Comment