உலகளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள்..! அண்ணா பல்கலை.க்கு எத்தனையாவது இடம் தெரியுமா..? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலகளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள்..! அண்ணா பல்கலை.க்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

உலகளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள்..! அண்ணா பல்கலை.க்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

சென்னை: உலகளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 373வது இடத்தை பிடித்து இருக்கிறது. உலகளவில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவதில் குவாக்குவாரெலி சைமண்ட்ஸ் என்ற நிறுவனம் சிறந்ததாகும். 

அந்த நிறுவனம் 2020ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக் கழகமானது கடந்த ஆண்டை விட 24 இடங்கள் முன்னேறி 373வது இடத்திற்கு சென்றிருக்கிறது.

கல்வி சார்ந்த நற்பெயர், தொழில் நிறுவனங்கள் மத்தியில் உள்ள நற்பெயர் என பல தரவுகளின் அடிப்படையில் இந்த முன்னேற்றம் நிகழ்ந்து இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் தவிர நாட்டில் உள்ள மற்ற முன்னணி கல்வி நிலையங்களும் சிறந்த இடத்தை பிடித்திருக்கின்றன. 

சென்னை ஐஐடி 7 இடங்கள் முன்னேறி, 88வது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் இந்திய அளவில் மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, காரக்பூர் ஐஐடி ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கிறது.


The best higher education institutions worldwide ..! Anna University Do you know any place ..?


Chennai: Anna University ranks 373 in the World Ranking of Best Educational Institutions globally. Guacquarelli Symonds is one of the best in publishing rankings for higher education institutions worldwide. The company has released its 2020 ranking for the year. Anna University of Chennai has jumped 24 places to 373 in the ranking.

This progress is based on many data, such as academic reputation and reputation among professional organizations. Apart from Anna University, other leading educational institutions in the country are also ranked. Chennai, IIT-7, rose 88 places. Mumbai IIT, Delhi IIT and Kharagpur IIT tops the list.

No comments:

Post a Comment

Please Comment