சிவில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.! இலவசமாக மாதிரி தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிவில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.! இலவசமாக மாதிரி தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

*🔖🌐சிவில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.! இலவசமாக மாதிரி தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்*

சிவில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா ஐ.எ.எஸ்‌ அகாடமி மற்றும்‌ இன்சயிட்ஸ்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி இணைந்து இலவசமாக நடத்தும்‌ மத்திய குடிமைப்பணி முதல்நிலை மாதிரி தேர்வுகளில்‌ கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ பட்டபடிப்பு முடித்து இந்திய அரசின்‌ சூடிமைப்‌ பணி தேர்வுகளில்‌ கலந்து கொள்ள ஆர்வமுடைய எழை எளிய மாணவ மாணவர்களுக்கு கோவை மாவட்டம்‌ ஆர்‌.எஸ்‌ புரத்தில்‌ அம்மா ஐ.ஏ.எஸ்‌ அகாடமி நல்லறம்‌ (NALLARAM) அறக்கட்டளையின்‌ சார்பில்‌ துவக்கப்பட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்த நல்லறம்‌ (NALLARAM) அறக்கட்டளையானது மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக  வளர்ச்சி மற்றும்‌ சிறப்பு திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.
வேலுமணி அவர்களால்‌ நிறுவப்பட்டு திரு.எஸ்‌.பி.அன்பரசன்‌ அவர்களை தலைவராகவும்‌ இதர இயக்குநர்களையும்‌ கொண்டு எழை எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகள்‌ மற்றும்‌ நலதிட்டங்களை வழங்கி வரும்‌ வணிக நோக்கமற்ற அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது.

இந்த அகாடமியில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் குழுவைக் கொண்டு குடிமைப் பணி தேர்வர்களின் கற்றலை மேம்படுத்துகின்றனர். மேலும் அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளும் குடிமை பணி ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகிறது.

தற்போது அம்மா ஐஏஎஸ் அகாடமி, பெங்களூருவில் ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனமான இன்சயிட்ஸ் அகாடமியுடன் இணைந்து வரும் மே 31ஆம் தேதி, சென்னை கோவை மற்றும் மதுரையில் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடத்தவுள்ளது.

இந்த தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.ammaiasacademy.com மற்றும் www.insightsonindia.com என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 0422-2472222 என்ற எண்ணிலும், 8760674444 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment