DIGITAL LEARNING: மாணவர்களுக்கு பல்வேறு செயலிகளை அறிமுகப்படுத்திய மத்திய அரசு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

DIGITAL LEARNING: மாணவர்களுக்கு பல்வேறு செயலிகளை அறிமுகப்படுத்திய மத்திய அரசு

DIGITAL LEARNING: மாணவர்களுக்கு பல்வேறு செயலிகளை அறிமுகப்படுத்திய மத்திய அரசு 

கரோனாவை முன்னிட்டு டிஜிட்டல் கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு பல்வேறு செயலிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க மத்திய அரசு டிஜிட்டல் கற்றலை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தீக்‌ஷா, இ பாடசாசை, என்.ஆர்.ஓ.இ.ஆர்., ஸ்வயம் மற்றும் ஸ்வயம் பிரபா ஆகிய ஆன்லைன் கல்வி முறைகளை அரசு அறிமுகம் செய்துள்ளது. 

தீக்‌ஷா 

இதுவொரு ஆன்லைன் செயலி ஆகும். இதில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணுப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள க்யூஆர் கோடைக் கொண்டு, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்தும் இதைப் படிக்கலாம். 

இ-பாடசாலை 

இது தனி செயலியாகவும் உள்ளது. என்சிஇஆர்டி இணைய தளமாகவும் செயல்படுகிறது. இதில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் பாடங்கள் உள்ளன. இதில் 1,886 ஆடியோக்கள், 2,000 வீடியோக்கள், 696 மின்னணுப் புத்தகங்கள் உள்ளன. 

கல்வி வளங்களுக்கான தேசியக் களஞ்சியம் (NROER) 

மத்திய அரசின் இந்த தளத்தில், வெவ்வேறு மொழிகளில் சுமார் 14,527 உள்ளடக்கங்கள் உள்ளன. இவை தவிர ஸ்வயம், ஸ்வயம் பிரபா தளங்களிலும் மாணவர்கள் கற்கலாம். இவை அனைத்தையும் மாணவர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, படித்துப் பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

Please Comment