Golden Advice.... மன நலம் காண...உடல் நலம் பேண...எளிய அறிவுரைகள்... - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Golden Advice.... மன நலம் காண...உடல் நலம் பேண...எளிய அறிவுரைகள்...

Golden Advice.... மன நலம் காண...உடல் நலம் பேண...எளிய அறிவுரைகள்...

என் நண்பரின் Request....

நல்ல டாக்டர் வேண்டும். நானும் என் அப்பாவும் Need medical Care for minor Complaints.

என் குடும்ப டாக்டரிடம் அழைத்து சென்றேன்.

இருவரையும் Check செய்து விட்டு, Nothing to worry என்று சில medicines எழுதிக் கொடுத்தார்.

என் நண்பரிடம் "உடல் உழைப்பு உங்களுக்கு அதிகம் இல்லை.
Morning walk அல்லது exercises daily செய்யுங்கள்" என்றார்.

எங்கே டாக்டர் அதுக்கெல்லாம் நேரம்?காலை முதல் இரவு வரை வேலையே சரியாக இருக்கிறது... என்றார்.

டாக்டர் " exercise செய்ய நேரம் இல்லை என்றால், உங்கள் தினசரி செயல்களையே exercise ஆக மாற்றி கொள்ளுங்கள்" என்றார்.

எப்படி? என் நண்பர் ஆர்வமாக கேட்டார்.

டாக்டர் கூறியது Golden advices....

1) ஆபிஸில் வேலை செய்யும்போது, நேரம் கிடைக்கும் போது, உட்கார்ந்த இடத்திலேயே பத்து முறை ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளியே விடுங்கள் உடல் நல்ல புத்துணர்ச்சியும் பெறும்.Mindம் active ஆக இருக்கும்.

2) ஆபிஸில் உட்கார்ந்து கொண்டே இருக்காதீர்கள்.அவ்வப்போது எழுந்து சென்று தண்ணீர் குடியுங்கள். ஏதாவது சந்தேகம் என்றால் எழுந்து சென்று Colleague இடம் கேளுங்கள். Keep your body active.

3) Office ல் Lift இருந்தால் தவிர்த்துவிட்டு படியை உபயோகப்படுத்துங்கள்

4) பஸ்ஸில் பயணித்தால், முதல் ஸ்டாப்பிலேயே இறங்கி கொண்டு, நடந்து செல்லுங்கள்.

இன்னும் யோசியுங்கள். பல வழிகள் கிடைக்கும்.

Basic Concept, உடலுக்கு, உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்

நண்பர் வியந்தார்.OK டாக்டர் முயற்சிக்கிறேன்... என்றார்.

என் அப்பாவும் வீட்டில் டல்லாகவே இருக்கிறார். அவருக்கு ஏதாவது advice? என்று கேட்டார்.

டாக்டர் அவர் அப்பாவை பார்த்து கூறினார்....

1) தனியாக டல்லாக பொழுதை கழிக்காதீர்கள். அது dangerous... உடலையும் மனதையும் கெடுத்து பல நோய்களுக்கு welcome கொடுக்கும்.

2) வீட்டில் Garden  இருந்தால், பொறுப்பு எடுத்து கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரை வகைகள், பூஜைக்கு தேவையான மலர்கள் என்று plan செய்து கொண்டு நல்ல தோட்டக்காரர் உதவியுடன் களம் இறங்குங்கள்.

3) தோட்டம் இல்லாவிட்டால், பக்கத்தில் பூங்கா ஏதாவது இருந்தால் அங்கே காலை மாலை நண்பர்களுடன் பொழுதை கழியுங்கள்.

4) உங்கள் அறையை நீங்களே சுத்தம் செய்யுங்கள். மற்றவர்களை எதிர்பார்ப்பதை குறைத்து கொள்ளுங்கள்

5) வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பொருட்கள், வாங்க நீங்களே செல்லுங்கள்.Jolly shoppimg.

6) பேரக்குழந்தைகளிடம் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க நேரம் ஒதுக்குங்கள்.Home works உதவ முடிந்தால் உதவுங்கள்.

7) TV யில் நல்ல அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளை பாருங்கள்.Quiz, Wild life, philosopy etc....No குடும்ப serials.

8 ) தியானம், யோகா நல்ல Meditation Centre சென்று கற்று கொள்ளுங்கள்.

9) உணவு எளிமையாக சீரணிக்கும் அளவு எடுத்து கொள்ளுங்கள்.

10) மரணத்தை கண்டு பயப்படாதீர்கள். அது வரும் போது வரட்டும். வெற்றிலை பாக்கு தட்டோடு வாசலில் நின்று கொண்டிருக்காதீர்கள்.

11) யாருக்கும் நாம் பிரயோசனமில்லை என்ற தன்னிரக்கம், self pity வேண்டவவே வேண்டாம்.

12) ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுத்த வரம்.அனுபவியுங்கள்.

Super advice... அவர்களுக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்கும்தான்.

🍀🎋🍀🎋🍀🎋🍀🎋🍀🎋🍀🎋

No comments:

Post a Comment

Please Comment