TNEB TANGEDCO: மொத்தம் 2,900 தமிழக அரசு வேலை!! ஊதியம் ரூ.59 ஆயிரம்! விண்ணப்பிக்கலாம் வாங்க
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 2900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
ரூ.59 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கள உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 2900
பணியிடம் : தமிழ்நாடு
கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல், ஓயர்மேன் போன்ற ஏதேனும் ஓர் பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.2029 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள், விதவைகள் உள்ளிட்டோர் 35 வயதிற்கு உட்பட்டும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 33 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tangedco.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய நாட்கள்
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 28.04.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி : 24.03.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tangedco.gov.in/linkpdf/note(19320)fieldhelper.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment
Please Comment