கொரோனா பரவாமல் தடுக்கும் அடிப்படை சுகாதார நடவடிக்கைகள்!- டிக்டாக்கை கையிலெடுக்கும் WHO
சீனாவில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸால் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே நீடித்து வருகிறது.
கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மக்களின் அச்சத்துக்குக் காரணமாக உள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே அது தொடர்பான வதந்திகளும் தவறான செய்திகளும் இணையம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கொரோனா பற்றி வரும் தவறான செய்திகளை தங்கள் வலைதளங்கள் மற்றும் செயலிகளிலிருந்து நீக்கி வருகின்றன.
தவறான செய்திகளை நீக்குவது மட்டும் இதற்குத் தீர்வாகாது, சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் முக்கியமானதுதான். அதனால், உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ்
தங்களுக்குப் பரவாமல் எப்படித் தற்காத்துக் கொள்வது மற்றும் நாம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை சுகாதார நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த வீடியோக்களை
ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் பகிர்ந்து வந்தது.தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு
வீடியோக்களை பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். இதன்மூலம் வைரஸ் தொடர்பான சரியான தகவல்களையும், விழிப்புணர்வையும் மேலும் அதிக மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Basic health measures to prevent coronal outbreaks! - WHO Tiktak
More than 80,000 people have been infected with the coronavirus, and more than 3,000 have died in China. Fear of coronavirus is lingering among people. People are also worried that Corona has not yet found a vaccine. Rumors and false rumors have been circulating on the Internet since Corona began to spread.In this case, social networks such as Facebook and Twitter are getting rid of the bad news about Corona from their websites and processors.
Removing bad news is not the only solution, it is important to bring the right information to the public. So, the World Health Organization videos on how to protect against coronavirus infection and what basic health measures we should take.Shared on Facebook, Twitter, and Instagram It is expected to reach more people with the right information and awareness of the virus.

No comments:
Post a Comment
Please Comment