10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் 

சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.


ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- 

 தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு கொரோனா நிவாரண தொகையான ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 நல வாரியங்களில் உள்ள 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குடும்பத்தாருக்கு முதலில் பரிசோதனை நடைபெறும். கொரோனா இருப்பதை மறைத்தால் சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கலாம். பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம். 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம். பொதுத்தேர்வு எப்போது என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான முக்கியமான தேர்வு. சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Please Comment