தினம் ஒரு தகவல் 200 விருதுகளை வென்ற சிறந்த கட்டிடக் கலைஞர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினம் ஒரு தகவல் 200 விருதுகளை வென்ற சிறந்த கட்டிடக் கலைஞர்

தினம் ஒரு தகவல் 200 விருதுகளை வென்ற சிறந்த கட்டிடக் கலைஞர் 

 20-ம் நூற்றாண்டின் சிறந்த கட்டிட கலைஞர்களில் ஒருவர் சீசர் பெல்லி. அமெரிக்க கட்டிடவியல் அமைப்பானது, வாழும் உலகின் முக்கியமான கட்டிட கலைஞர்கள் 10 பேரின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. 


அதில் ஒருவர் சீசர் பெல்லி. அர்ஜென்டினாவில் துக்குமன் நகரத்தில் 1926-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பிறந்தார். தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் கட்டிட கலையில் பட்டம் பெற்றார். அங்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டிடவியலில் முதுநிலை பட்டம் பெற்றார். 


படிப்பு முடித்த பிறகு அமெரிக்காவிலேயே தொழில் பழகுனராக பணியாற்றினார். பயிற்சி காலகட்டத்திலேயே கட்டிடங்களை வடிவமைக்க தொடங்கி விட்டார். நியூயார்க் விமான நிலையத்தில் டி.டபுள்யூ. விமான மையத்தை இவர்தான் வடிவமைத்தார். 

கட்டிட வடிவமைப்பாளராக இல்லாமல் கட்டிடவியல் பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. யேல் பல்கலைக்கழகத்தின் கட்டிடவியல் பள்ளியின் முதல்வராக 1977-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அந்த காலகட்டத்திலேயே சீசர் பெல்லி அண்ட் அசோசியட் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். தனி நிறுவனத்தை தொடங்கிய பிறகு தனது முதல்வர் பதவியை துறந்தார். 


ஆனாலும் கட்டிடவியலின் நவீன தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தனிப்பட்ட ஆர்வத்தால் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார். கட்டிடவியல் குறித்து தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். அமெரிக்க கட்டிடவியல் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளருக்கான தங்கப் பதக்க விருது உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட உலக விருதுகளை பெற்றுள்ளார். மலேசியாவில் உள்ள இரட்டை கோபுரத்தை வடிவமைத்தவரும் இவர்தான். 

மேலும் ஜப்பான், மலேசியா, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் எழுந்து நிற்கும் பல கட்டிடங்கள் அவரது கட்டிட வடிவமைப்பின் திறமையை பறைசாற்றி கொண்டிருக்கின்றன.

Best Architect to Win an Information 200 Awards of the Day

 Cesar Belle is one of the greatest architects of the 20th century. The American Architectural Organization recently released a list of the world's 10 most important architects.


One of them is Caesar Belle. Born on October 12, 1926 in Tucuman, Argentina. He is currently a citizen of the United States of America. He graduated in architecture from one of the colleges there. There he earned a Masters in Architecture from the University of Illinois.

After graduation, he worked in the United States as a professional. He began designing buildings during the training period. DW at New York Airport He designed the airport.

He has experience as an architectural professor and not as architect. He was appointed principal of the Yale University School of Architecture in 1977. About the same time Caesar started Belly & Associate. He left his post after starting a separate company.

However, he also works as a part-time lecturer with a personal interest in teaching students the modern techniques of architecture. He continues to write articles on architecture in various journals. He has received more than 200 world awards, including the Gold Medal of Lifetime Achievement by the American Architectural Society. He is also the one who designed the Twin Tower in Malaysia.

Also, many of the emerging buildings in the world, including Japan, Malaysia, the US, Spain, and the UK, are proud of his architectural skills.

No comments:

Post a Comment

Please Comment