உலக சுகாதார தினம் 2020: ஆரோக்கியமாக வாழ 5 ரகசியங்கள்! தெரிந்து கொள்ளுங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலக சுகாதார தினம் 2020: ஆரோக்கியமாக வாழ 5 ரகசியங்கள்! தெரிந்து கொள்ளுங்கள்

உலக சுகாதார தினம் 2020: ஆரோக்கியமாக வாழ 5 ரகசியங்கள்!  தெரிந்து கொள்ளுங்கள்

இந்த 5 விஷயங்களை உலக சுகாதார தினத்தில் தெரிந்து கொண்டதோடு மட்டும் அல்லாமல் அதை பின்பற்றவும் செய்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உலக சுகாதார தினமான இன்று நாம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எளிதான சிலவற்றை மாற்றி அமைப்பதன் மூலம் நம் உடல்நலம் பாதுகாக்கப்படும்.

சத்தான உணவை உண்பது


நமது உணவு தான் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம். உணவகங்களில் ருசிக்காக மட்டும் சாப்பிட்டு விட்டு ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குவதை தவிர்க்க வேண்டும். நமது உணவில் சத்தான உணவுகளை சேர்ப்பதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம். அதிகப்படியான ஊட்ட்ச்சத்துகளை உட்கொள்ள வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் எந்த பொருளை எடுத்தாலும், அதில் உள்ள சத்துகள் பற்றி தெரிந்து கொண்டு பின் வாங்க வேண்டும். நம் உணவு தான் நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடை

உடல் பருமன் தான் இப்போது பல இளம் வயதினரை அச்சுறுத்தும் சொல்லாக மாறியுள்ளது. இதுவே பல உடல்நலக்குறைபாடு பிரச்னைக்கும் காரணம். தினமும் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து வந்தால் உடல் எடை சரியான அளவு வைத்துக்கொள்ளா முடியும். உடற்பயிற்சி தான் உடலை பிட்டாக மாற்றும்.

மன ஆரோக்கியம்


உடல் ஆரோக்கியம் போல மன ஆரோக்கியமும் மிக முக்கியமான ஒன்று. ஒரு சிலர் உடல் நலத்தை பற்றி மட்டும் யோசித்து விட்டு மன ஆரோக்கியத்தை பேன மறந்து விடுவார்கள். எளிதான யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சி ஆகியவை மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு


இந்த வரியை பல முறை படித்திருப்போம். புகைப்பழக்கம் நுரையீரை அதிகமாக பாதிக்கும். ஒருமுறை புகைப்பதால் பல உடல் உபாதைகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். புகைப்பழக்கம் 40 வயதிற்கு மேல் தீவிரமாக நுரையீரல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

தண்ணீர்

நாம் என்னதான் காபி, டீ, ஜூஸ் என குடித்தாலும், தண்ணீருக்கு ஈடாக முடியாது. உண்மையில் சர்க்கரை கலந்த நீர் ஆகாரத்தை குடிப்பதால் உடல் எடை தான் அதிகரிக்கும். தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லி கேட்டிருப்போம். தண்ணீரில் வெறும் லெமன் மட்டும் கலந்து குடிக்கலாம். சர்க்கரை, உப்பு என எதையும் சேர்க்கக்கூடாது.

No comments:

Post a Comment

Please Comment