பிராட்பேண்ட் வேகம் 22.5% சரிவு
செல்லிடப்பேசியின் பிராட்பேண்ட் வேகம் மாா்ச் மாதத்தில் 22.5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிராய் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா நோய்த் தொற்றால் வீடுகளிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வோா் எண்ணிக்கை நாடு முழுவதும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக,4ஜி பதிவிறக்க பிராட்பேண்ட் வேகம் மாா்ச் மாதத்தில் 22.5 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
அதன்படி, 2ஜி, 4ஜி சேவைகளை வழங்கி வரும் பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம் பிப்ரவரியில் 8 எம்பிபிஎஸ்-ஆக இருந்த நிலையில் மாா்ச் மாதத்தில் 6.2 எம்பிபிஎஸ்-ஆக குறைந்துள்ளது.
அதேபோன்று, மாா்ச் மாதத்தில் வோடபோன் நெட்வொக்கின் வேகம் 8- லிருந்து 16 சதவீதம் குறைந்து 6.7 எம்பிபிஎஸ்-ஆகவும், ஜியோவின் வேகம் 21.5-லிருந்து 9% சரிந்து 19.6 எம்பிபிஎஸ் ஆகவும் இருந்தது என டிராய் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment