உதவி இன்ஜினீயர் உள்ளிட்ட பணிகளுக்கான
போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.23 வரை அவகாசம் நீட்டிப்பு.
ஜூன் பருவ இறுதி தேர்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள உதவி இன்ஜினீயர், சுற்றுச் சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் ஆகிய பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப் பப்படும் என்றும், இதற்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி என்றும் முன்பு அறிவிக்கப்பட்டி ருந்தது.
தற்போது அமல்படுத்தப்பட் டுள்ள ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
காலிப் பணியிடங்கள், அதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment