ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க யுஜிசி 3 மாதம் அவகாசம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க யுஜிசி 3 மாதம் அவகாசம்

ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க யுஜிசி 3 மாதம் அவகாசம் 


கரோனா வைரஸ் பரவல் கார ணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத னால் பிஎச்டி, எம்பில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற் கொள்ளும் மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை இறுதி செய்ய முடியாமல் தவிப்பில் உள்ளனர். 

இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு உயரதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கல்வியாண்டு தாமதம், பருவத் தேர்வுகள் மற்றும் வகுப்புகளை நடத்துதல் தொடர் பாக தற்போதைய சூழல்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க ஹரியாணா மத்திய பல்கலை. துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில் நிபுணர் குழு அமைக் கப்பட்டுள்ளது. 


 இதற்கிடையே எம்பில், பிஎச்டி ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை ஏப்ரல், மே மாதங்களில் பல்கலை.யில் சமர்ப் பித்தாக வேண்டும். ஆனால், கரோனா தாக்கத்தால் மார்ச் 3-வது வாரம் முதலே அனைத்துவித பணி களும் முடங்கிவிட்டன. மாணவர் களும் தங்கள் ஆய்வுப் பணி களை முடிப்பதில் சிரமம் இருப்ப தாகவும், மாற்று ஏற்பாடுகள் மேற் கொள்ளவும் தொடர் கோரிக்கை வைத்தனர். 


அதையேற்ற நிபுணர் குழு 3 முதல் 6 மாதங்கள் வரை மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறது’’ என்றனர்.

SOURCE THE HINDU TAMIL THISAI 12/04/2020

No comments:

Post a Comment

Please Comment