முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு (முழு விவரம்) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு (முழு விவரம்)

900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு (முழு விவரம்)


மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு அரசாணை வெளியீடு 

சென்னை, ஏப்.26- 

 பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2012-13-ம் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. 

அந்த பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய 9 பாடங்களுக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு நீட்டிப்பு 31-12-2019 உடன் முடிந்தது. 

இதையடுத்து அந்த பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 1-1-2020 முதல் 31-12-2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நிதித்துறையின் மறுஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment