கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ரூ.70 கோடி நிதியுதவி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ரூ.70 கோடி நிதியுதவி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ரூ.70 கோடி நிதியுதவி! சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் ரூ. 70 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதையும் படிக்கவும்
அரசு ஊழியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். இதனால், மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு பல்வேறு நிதியுதவிகளை வழங்கி வருகிறது. 

  மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் தாங்களால் இயன்ற உதவிகளை வழங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, பல்வேறு அமைப்புகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. 

  இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆசிரியர்கள் சார்பில் ரூ. 70 கோடி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment