ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீத அளவுக்கு பணியாளர்கள் அலுவலகம் வந்தால் போதும் என்றும் மீதி பேர் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் பலர் அவர்களின் வயது அடிப்படையில் மார்ச் 31-ம் தேதியான நேற்றுடன் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், மார்ச் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படாது என்றும் அலுவலத்தில் இருந்து பணியாற்றுவோருக்கும் வீட்டிலி ருந்து பணியாற்றுவோருக்கும் இது பொருந் தும் என்றும் மத்திய அரசின் பணியா ளர் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
Please Comment