தினம் ஓரு தகவல் கொரோனா ஊரடங்கினால் கார் ஓடாமல் உள்ளதா...?
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் கார்களை அதிகம் இயக்க முடியாத நிலை. நீண்ட நாட்கள் காரை இயக்காமல் இருந்தால் காரின் பேட்டரி பாதிப்படையும். இதனை சரிசெய்ய சில யோசனைகளை இங்கே காண்போம்.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை பேட்டரியில் உள்ள ‘டிஸ்டில்டு வாட்டர்’ அளவை சோதிப்பது அவசியம். தண்ணீரின் அளவு அதில் உள்ள அதிகபட்ச குறியீடு வரை நிரப்ப வேண்டும்.
சிலர் காரை வாரம் ஒருமுறை, மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பயன்படுத்துவார்கள். இவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறை என்ஜினை இயக்க வேண்டும். இதனால் பேட்டரியில் உள்ள மின்சக்தி குறையாமல் இருக்கும்.
சில நேரங்களில் காரை வீட்டில் விட்டுவிட்டு வெளியூருக்கு சென்று 10 அல்லது 15 நாள் கழித்து திரும்புவர்.
அவ்விதம் நீண்ட காலம் காரை பயன்படுத்தாத சூழலில் பேட்டரியின் பாசிட்டிவ், நெகட்டிவ் வயர்களை கழற்றி வைத்துவிட்டு போகலாம். இதனால் கார் பேட்டரி இழப்பு தவிர்க்கப்படும். பேட்டரி சார்ஜ் குறையாமல் இருக்கும். ஊருக்கு திரும்பியதும் மீண்டும் வயரை பேட்டரியில் இணைப்பதன் மூலம் கார் உடனடியாக ஸ்டார்ட் ஆகும். பேட்டரி சார்ஜ் குறைவதையும் தவிர்க்க முடியும்.
கார் பேட்டரியை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. இதன் மூலம் கார் பாதி வழியில் மக்கர் செய்து நின்று போவதை தவிர்க்க முடியும். கார் இயங்காதபோது காரினுள் விளக்கை எரியவிடுவது, கார் ஸ்டீரியோவில் பாட்டு கேட்பது போன்றவற்றை தவிர்த்தாலே பேட்டரியின் ஆயுள் கூடும்.
கார் நிறுவனம் அளிக்கும் மின்சார பாகங்கள் தவிர்த்து கூடுதலாக பேன்சி ஹாரன், அலங்கார விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தும்போது பேட்டரியின் செயல்திறன் விரைவில் குறைந்துபோகும்.

No comments:
Post a Comment
Please Comment