ஊரடங்கு காலத்தில் வீடுகளில் இருந்தபடியே தபால் சேவை செயலி அறிமுகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஊரடங்கு காலத்தில் வீடுகளில் இருந்தபடியே தபால் சேவை செயலி அறிமுகம்

ஊரடங்கு காலத்தில் வீடுகளில் இருந்தபடியே தபால் சேவை செயலி அறிமுகம் 

 கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த கால கட்டத்தில் வீடுகளில் இருந்தபடியே தபால் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த செல்போன் செயலி ஒன்றை தபால் துறை நவீனப்படுத்தி உள்ளது. ‘போஸ்ட் இன்போ’ அல்லது ‘இந்தியா போஸ்ட்’ இணையதள முகவரி மூலம் வீடுகளில் இருந்தபடியே அவசர தபால் சேவையை பொதுமக்கள் பெற முடியும். 

நேரடியாக http://ccc.cept.gov.in/cov-id/re-quest.aspx இந்த இணைப்பின் மூலமாகவும் பெறமுடியும். குறிப்பாக தபால், தபால் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதிச்சேவைகள் உட்பட அனைத்து தபால் சேவைகளையும் பெற முடியும். ஒரு சேவை, தேவை என்ற கோரிக்கை, வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்ட பிறகு, தனிப்பட்ட குறிப்பு எண் கொடுக்கப்படும். 

வாடிக்கையாளர்கள், அவர்களது கோரிக்கை பற்றிய நிலைமையைத் தெரிந்து கொள்ள இந்த எண் உதவும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ‘போஸ்ட் இன்போ’ என்ற இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, பயன் பெறலாம். 

 மேற்கண்ட தகவலை தபால் துறை தலைவர் லி.செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். 

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment