மனநல ஆலோசனை பெற
பிரத்யேக எண்கள் அறிவிப்பு
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத் துவ பல்கலை. துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருப்பதாலும், சமூக இடைவெளி காரணமாக ஒருவருக்கு ஒருவர் விலகி இருப்பதாலும், மன அழுத்தமும் மன உளைச்சலும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு உதவும் வகையில், தொலைபேசி வழியாக மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
எனவே, ஆலோசனை பெற விரும்புவோர் காலை 10 முதல் 12 மணி வரையிலும், மாலை 3 முதல் 5 மணி வரையிலும் இந்த ஆலோ சனைகளைப் பெற்று பயன் அடையலாம்.
காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை 8778619480, மாலை 3 மணி முதல் 5 மணி வரை 9941142327 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், splcoun@tnmgrmu.ac.in என்ற மின் அஞ்சல் வழியாகவும் ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment