ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்! 



 நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 



இந்த கட்டுப்பாட்டு தளர்வுகள் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அதேநேரத்தில், ஏப்ரல் 20 ஆம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 


(SOURCE DINAMANI 15/04/2020)

முன்னதாக, கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார். ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் 50 சதவீத ஊழியர்களுடன் குறிப்பிட்ட அலுவலகங்கள் இயங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. 

 ► அதன்படி, அலுவலகத்தின் நுழைவாயில், அலுவலக உணவகம், அலுவலகக் கூட்டம் நடக்கும் இடங்கள், கட்டிடத்தின் முன் வாயில்கள், மின் தூக்கிகள் கழிவுநீர்க் குழாய்கள் இருக்கும் இடங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள் சுத்தமாக தொற்று ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். 



 ► ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு நிறுவனம் தரப்பில் இருந்து தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். ஒரு வாகனத்தில் 30 முதல் 40% நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். 

 ► அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

 ► பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்க வேண்டும். 

 ► அலுவலகத்தில் முகக்கவசம் அணிவதோடு, அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தேவையான இடங்களில் கை கழுவும் திரவங்கள், கை சுத்தப்படுத்தும் திரவங்களை வைத்திருக்க வேண்டும். 

 ► மின் தூக்கிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி 2 அல்லது 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும். 



 ► 10 நபர்களுக்கு மேல் அலுவலகக் கூட்டங்
களில் கலந்துகொள்ளக் கூடாது. கூட்டங்களில் ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். 

 ► ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். 

 ►அலுவலகத்தில் மது பானங்கள், குட்கா, புகையிலை பயன்படுத்தக்கூடாது. வெளி ஆட்களை அலுவலகத்தினுள் அனுமதிக்கக் கூடாது.

 ► அலுவலகத்தின் அருகில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள் இருக்கும் இடங்கள் குறித்த பட்டியல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

 ► 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனம் அறிவுறுத்த வேண்டும். 

 ► அனைத்து ஊழியர்களும் அரசின் 'ஆரோக்ய சேது' செயலியை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


(Google Translation)

Curfew: Terms to follow in offices!

 The Home Ministry has issued guidelines for some restrictions from April 20, with curfews in the country.

These restrictions will come into effect on April 20. At the same time, it mandates that all curfews must be complied with by April 20.



Earlier, Prime Minister Narendra Modi yesterday ordered the extension of the curfew to April 3, as the corona spread echoed on April 14. It has been noted that the guidelines on curfew extension may run specific offices with 50 percent staff.

Subsequently, the Union Home Ministry has issued some guidelines on the procedures to be followed in the offices.

 ► Accordingly, the office gateway, office cafeteria, office meeting areas, front gates of the building, electrical insulators, sewage sinks and toilets should be clean and non-contagious.

Provide necessary transport facilities from the company side for the arrival of employees office. There should be only 30 to 40% of people in a vehicle. Disinfectant should be sprayed on all vehicles.

Disinfectant should be regularly sprayed on machinery in office and factory.

 ► Employees must be provided with medical insurance.

 ► Wearing face mask in office and social space should be followed in all areas of office. Keep hand washing fluids and hand sanitizing fluids where necessary.

 ► Only 2 or 3 people have to go through the social gap in electrical sleepers.

 ► No more than 10 people must attend office meetings. There should be 6 feet of space between each of the meetings.


 There should be an hour gap between each shift.

 Alcohol, beverages, tobacco and tobacco should not be used. No outsiders should be allowed into the office.

 A list of hospitals and clinics near the office should be attached to the office.

 The company should advise people over 65 to work from home.

 . It has been reported that all employees should be encouraged to use (Intsall) the state's 'Arogya Sethu' App


No comments:

Post a Comment

Please Comment