நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்
சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை காலஅவகாசம்
தமிழக அரசு அரசாணை
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த மார்ச் வரையுள்ள சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவ காசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24 முதல் நாடு முழு வதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,
‘நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கான காலஅவ காசம் 3 மாதங்களுக்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை கட்டாதவர்கள் மீது கூடுதல் அபராதக் கட்டணம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை சட்டப் படி எடுக்கலாமா என்பது குறித்து கடந்த மார்ச் 30-ம் தேதி அரசிடம் நகராட்சி நிர்வாக ஆணையர் விளக்கம் கோரியிருந்தார்.
இது தவிர, மார்ச் 31-ம் தேதியுடன் நிதி ஆண்டு முடிவடைந்த நிலையில், ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய வணிக உரிமம் குறித்தும் விளக்கம் கோரியிருந்தார்.
பொதுமக்களின் வாழ்வாதா ரத்தைக் கருத்தில்கொண்டு மார்ச் வரை கட்டப்பட வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரிகள், குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கான கட்ட ணங்களை ஜூன் 30 வரை எவ்வித அபராதமும் இன்றி பெறலாம் என்று அரசு விளக்கம் அளித்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சி கள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வரி மற்றும் கட்டணங்கள், உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு ஜூன் 30 வரை அவகாசம் அளித்து தமிழக அரசு அரசாணையையும் பிறப்பித்துள்ளது.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment